சிறுவர் தினத்தை முன்னிட்டு Voice of Eravur அமைப்பினால் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட பேச்சு போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு



ஏறாவூர் சாதிக் அகமட்-
சிறுவர் தினத்தை முன்னிட்டு Voice of Eravur அமைப்பினால் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட பேச்சு போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு ஏறாவூர் கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று Voice of Eravur அமைப்பின் தலைவர் M.I.M. தஸ்லீம் தலைமையில் இடம் பெற்றது.

அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி உதவி கல்விப் பணிப்பாளர் A.M. முபாஸ் தீன் , ஓய்வு பெற்ற அதிபர் A.M. ஜூனைத் மற்றும் அப்துல் ரஹ்மான் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் A.G. அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து

மட்டக்களப்பு மத்தி உதவி கல்விப் பணிப்பாளர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்தில் Voice of Eravur அமைப்பானது கடந்த 3 வருடங்களாக பல சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றது .

அந்த வகையில் மாணவர்களுக்கு இவ்வாறான போட்டி நிகழ்வுகளை நடாத்தி ஊக்கப்படுத்தும் இந்த செயற்பாடு வரவேற்க தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார் .
இந்நிகழ்வில் பேச்சு போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு Voice of Eravur அமைப்பினர் பெருமதி மிக்க பரிசில்களை வழங்கி கெளரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :