தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு "நீர் வடிகட்டி | Water Filter" வழங்கிவைப்பு



நூருல் ஹுதா உமர்-
றக்காமம் பிரதேச செயலக பிரிவில் தொற்றா நோயினால் (கிட்னி நோய்) பாதிக்கப்பட்டவர்களின் சுகாதார மேம்பாட்டை வலுவூட்டி சுத்தமான நீரை பயன்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான "நீர் வடிகட்டி வழங்கி வைக்கும் நிகழ்வு தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட காரியாலயப் பொறுப்பாளர் எம்.எல். முஸப்பிரின் ஏற்பாட்டில் இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நானயக்கார மற்றும் கிராமிய நீர் வழங்கல் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா ஆகியோரின் சிறுநீரக நோயாளிகளுக்கான நிவாரன வேலைத்திட்டத்தின் கீழ் வன சீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள் அமைத்தல், உள்பாதுகாப்பு வேலைதிட்டங்கள் அமைச்சின் ஊடாக இறக்காமம் பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து கிட்னி நோயாளிகளுக்கும் இலங்கை சென்சிலுவை சங்க அனுசரணையில் "நீர் வடிகட்டி" வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி)யின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன சீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள் அமைத்தல், உள்ளக பாதுகாப்பு வேலைதிட்டங்கள் அமைச்சர் விமல திசாநாயக்கவின் செயலாளர் அஞ்சன திசாநாயக்க கலந்து கொண்டார். மேலும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், அமைச்சர் விமல திசாநாயக்கவின் பிரதேச இணைப்பாளர்கள், தேசிய சமூக நீர் வழங்கள் திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டதோடு பயனாளிகளுக்கான நீர் வடிகட்டி " களையும் வழங்கிவைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :