மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - ஏறாவூர் சவுக்கடி பகுதியில் 03 பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பல நாட்களாக இடம்பெற்று வந்த குடும்பத்தகராறு காரணமாக கணவனே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய தயாளகுமார் சிவாஞ்சனா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் சடலம் தற்பொழுது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான கொலை செய்யப்பட்டவரின் கணவர் தலைமறைவாகி இருப்பதுடன் அவரை தேடும் பணியில் ஏறாவூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment