இலங்கையின் பெண்கள் இளைஞர் இயக்கமான பெண் சாரணர் சங்கத்தின் 105வது வருடத்தை முன்னிட்டு சங்கத்தினால் பல முக்கிய நிகழ்வுகள் கடந்த 20ஆம் திகதி கொழும்பில் ஏறட்பாடு செய்யப்பட்டிருந்தன.
பிரதம ஆணையாளர் திருமதி சுலாரி ஜயவர்த்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 9 மாகாணங்களையும் சேர்ந்த சாரணர்கள் கலநது கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் சாரணர்களின் நடைபவணி மற்றும் சைகிள் பேரணி என்பனவும் நடைபெற்றன.
உதவி ஆணையாளர் திருமதி நிர்மலி வில்லியம். தொடர்பாடல் ஆணையாளர் திருமதி ருஷானி அஸீஸ், சர்வதேச ஆணையாளர் திருமதி நதீகா குணசேகர, லிட்டில் பிரண்ட்ஸ் ஆணையாளர் நதுணி விக்ரமதுங்க, பட்டர்பிளிக்ஸ் ஆணையாளர் திருமதி நிரோஷா விஜேதுங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment