குறிப்பாக அவர் பிறந்த காரைதீவிலும் கனடாவிலும் இடம்பெற்ற ஜனனதின நிகழ்ச்சிகளை இங்கு தொகுத்துத் தருகின்றோம்.
காரைதீவில்..
அவர் பிறந்த காரைதீவு மண்ணில் ' ஒஸ்கார்'( AUSFAR) (அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம்) சுவாமி விபுலாநந்தர் நினைவுப்பேருரையுடன்கூடிய பரிசளிப்புவிழாவை ஞாயிறன்று(27) காரைதீவு விபுலாநந்த மணி மண்டபத்தில் நடாத்தினர்.
சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் மற்றும் திருமுன்னிலைஅதிதியாக இ.கி.மிசன் மட்டு.மாநில மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தா ஜீ மஹராஜ் கலந்து சிறப்பித்தனர்.
'தமிழ்க்கல்வியும் தமிழில்கல்வியும்' என்ற மகுடத்தில் சுவாமி தொடர்பான நினைவுப்பேருரையை கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் சி.மௌனகுரு காணொளி மூலம் நிகழ்த்தினார்.
கௌரவஅதிதிகளாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ,பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் சிறப்பு அதிதிகளாக பணிமன்ற தலைவர் வி.ஜெயநாதன், கோட்ட கல்வி பணிப்பாளர் ஜே.டேவிட் ,ஆலய ஒன்றிய தலைவர் இ.குணசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
'மீன்மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள்..' என்ற அருமையான பாடல் லோ.வித்யாசினியின் நடனம் உள்ளிட்ட கலைசிகழ்ச்சிகளும் மேடையேறின.
சுவாமியின் 130வது ஜனனதினத்தையொட்டி ஒஸ்கார் அமைப்பினர் ஏலவே காரைதீவுக்கோட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடையே பேச்சு கட்டுரை சித்திரம் பாவோதல் ஆகிய தமிழ் இலக்கிய ஆக்கத்திறன் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தியிருந்தனர். போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்க்கான பெறுமதிமிக்க பணப்பரிசுகள் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டன.
முதலாம் பரிசுபெற்ற மாணவருக்கு 2000ருபாவும் நினைவுச்சின்னமும் 2ஆம் 3ஆம் இடம்பெற்ற மாணவர்க்குமுறையே 1500ருபா 100ருபா பணப்பரிசும் நினைவுச்சின்;னமும் வழங்கிவைக்கப்பட்டன. ஒஸ்கார் பிரதேசக்குழுவின் உறுப்பினர்களான லோ.ஹிருஷாலினி வரவேற்புரை வழங்க வை.சத்தியமாறன் நன்றியுரை வழங்கினார்.
இதற்காக ஒத்துழைத்த ஒஸ்கார் சர்வதேச இலங்கை மற்றும் காரைதீவு குழுவினருக்கு நன்றிகள் என அவுஸ்திரேலியாவிலிருந்து ஒஸ்கார் செயலாளர் அ.மகேந்திரன்(கட்டடக்கலை நிபுணர்) தெரிவித்தார்.
கனடாவில்...
கனடா சுவாமி விபுலானந்தர் கலை மன்றம் கனடா ஸ்காபுறோ நகரில் விபுலானந்த அடிகளாரின் 130வது பிறந்த நாளை அமைப்பின் தலைவர் எல். புருஷோத்தமன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது.
கனடாவில் நடைபெற்ற சுவாமி விபுலாநந்தரின் 130ஆவது ஜனனதினவிழாவில் இந்தியா காசியிலிருந்து மெய்நிகர் இணையவழி மூலம் பேசிய இ.கி.மிசனின் மட்டு.மாநில உதவிமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் தெரிவிக்கையில்....
சுவாமி விபுலானந்தர் அவர்களை 'முத்தமிழ் அறிஞர்'என்ற வட்டத்திற்கு அடக்கி விடமுடியாது. அவரது இளவயதிலிருந்தே இறைவனின் ஆசியும் அருளும் பெற்ற ஒருவராக வாழ்ந்துள்ளார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்:
அவர் விரும்பிய போதெல்லாம் அவருக்கு தேவையான பொருட்களை அவரை அறியாதவர்கள் பலர் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். உதாரணமாக சில புத்தகங்களை அவர் வாசிக்க விரும்பி;ய போது அவை விபுலானந்தர் அடிகளாருக்கு எவ்வித தடையுமின்றி கிடைத்துள்ளன.
எனவே அந்த மகானின் 130வது பிறந்த நாளை உலகெங்கும் பலநாடுகளிலிருந்தும் அவரை மரியாதை செய்து நேசிப்பவர்களாகிய நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.என்றார்.
சுவாமி விபுலானந்தர் கலை மன்றம்- கனடா அமைப்பின் தலைவர் எல். புருஷோத்தமன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவை மன்றத்தின் செயலாளர் நித்தி சிவானந்தராஜா சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் . கோணேஸ்- கீதா தம்பதியினர் மங்கல விளக்கேற்றினர். த விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை சுதர்ஷன் பத்மநாதன் ஆகிய இருவரும் விபுலானந்தர் அடிகளாரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்கள்.
சங்கீத பூசணம் திருமதி குலநாயகி விவேகானந்தன் விபுலானந்தர் அடிகளாரின் புகழ்பாடும் பாடல்களை இசையோடு பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
தொடர்ந்து கலாநிதி இளையதம்பி பாலசுந்தரம். மா. நல்லரத்தினம். சட்டத்தரணி சாம் தில்லையா ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினார்கள்.
தொடர்ந்து அமெரிக்கா வாழ் டாக்டர் தமிழ்ச் செல்வி முருகேசன் அவர்கள் சிறப்புரையாற்றி சபையோரை மகிழ்வித்தனர். அவரைத் தொடர்ந்து கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கமும் சிறப்புரையாற்றினார்.
கவிஞர் குமரகுரு நன்றியுரையாற்றினார்.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
0 comments :
Post a Comment