தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.எல்.எம்.அன்ஸார் தெரிவித்தார்.
ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள எமது பாடசாலையில் இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்கு 76 மாணவர்கள் தோற்றினர். அதில், 16 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதோடு, 48 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களான ஏ.எல்.எம்.சனூஸ், எம்.ஏ.யாகூப் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கிய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் எம்.எல்.எம்.அன்ஸார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment