தென்கிழக்குப் பலகலையின் பிரயோக விஞ்ஞான பீட 2019/2020 ஆம் வருட மாணவர்கள் உள்நுழையும் நிகழ்வு!


எம்.வை.அமீர்,சலீம் றமீஸ்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீட 2019/2020 ஆம் வருட மாணவர்கள்; பல்கலைக்கழக வளாகத்துக்குள் உள்நுழையும் நிகழ்வு, 2022.03.28 ஆம் திகதி பிரயோக விஞ்ஞான பீட விரிவுரை அரங்கில் இடம்பெற்றது.

குறித்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்தகால கொரோனா அனர்த்தத்தின் காரணமாக, 2021.09.06 ஆம் திகதி முதல் சூம் தொழினுட்பத்தினூடாக இடம்பெற்று, முதல் பருவத்துக்கான கற்கைகள் பூர்த்தியான நிலையிலேயே; இம்மாணவர்களது நேரடியான பல்கலைகழக உள்நுழைவு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுக்குப் பிரதம பேச்சாளராக பீடாதிபதி கலாநிதி யூ.எல் செய்னுடீன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையின் போது; மாணவர்கள் பெற்றுள்ள பொன்னான வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, தங்களது வாழ்வை ஒளிமயமானதாக்கிக் கொள்ளவேண்டும் என்றும், இக்கட்டான இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்காக அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் மாணவர்களுக்கும் நாட்டுக்கும் நன்மையளிக்கக்கூடியதாக அமையவேண்டும் என்றும், அதற்காக மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த நல்ல சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இங்கு கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி எம்.ஜே.எம். ஜெபீன், தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில், தரம்வாய்ந்த விரிவுரையாளர்களும் வளர்ந்த நாடுகளில் உள்ளதுபோன்ற ஆய்வுகூடங்களும், அங்கு உயர்ரக உபகரணங்களும் உள்ளதாகவும், மாணவர்கள் தங்களது அறிவு விருத்திக்காக இவைகள் அனைத்தையும் பயன்படுத்தி; இங்கிருந்து வெளியேறும்போது அறிவில் முழுமை பெற்றவர்களாக செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன் மாணர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், பிரச்சினைகள் இருந்தால் அவைகளை உடனடியாக தன்னிடமோ அல்லது மாணவர் ஆலோசகர்களிடமோ தெரிவித்து தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களின் முதல்நாள் பிரவேசத்தின்போது வளாகத்திலுள்ள ஆய்வுகூடங்கள், நூலகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஒலுவிலில் உள்ள பிரதான நூலகம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மாணவர்கள் பார்வையிட்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட 2019/2020 ஆம் வருடத்துக்காக 257 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 125 மாணவர்கள் பௌதிகவியலுக்கும் 132 மாணவர்கள் உயிரியல் பிரிவிலும் இணைந்து கொண்டு கல்விகற்று வருகின்றனர்.

இந்நிகழ்வின்போது பிரயோக விஞ்ஞான பீடத்தின் திணைக்களங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உதவிப் பதிவாளர் எஸ்.அர்ச்சனா, விடுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் உடற்கல்வி போதனாசிரியர் ஐ.எம்.கடாபி உள்ளிட்டவர்களும் கல்விசாரா உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :