கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சமூக ஆர்வலர்களுக்கான பாராட்டு விழா - 2022



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பஹா கல்வி வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்துக்காக செயற்பட்டுவரும் கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் இரண்டு வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமூக ஆர்வலர்களைப் பாராட்டும் விழாவும், 2022 ஆம் வருடத்துக்கான செயற்திட்ட முன்வைப்பு நிகழ்வும் அண்மையில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவரும், கம்பஹா மற்றும் களனி ஆகிய கல்வி வலயங்களுக்கான தமிழ் மொழி மூல பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.ரீ.எம். தெளஸீர் ( நளீமி )தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இம் மன்றத்தின் பணிகளுக்கு பங்களிப்புச் செய்த அனுசரணையாளர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் செயலாளரும் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் அதிபருமான எம்.ஏ.எம். அஸாமின் நிகழ்ச்சி நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற இவ் விழாவில் கம்பஹா வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
உடுகொட அரபா மகா வித்தியாலய ஆசிரியர் எம்.எம்.எம். முஹிதீனின் கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவின் வரவேற்புரை குமாரிமுல்ல முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் எம்.கே.ஆர். முஹம்மதினால் நிகழ்த்தப்பட்டது. கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் இரு வருட கால சாதனைகளை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எம்.எம்.. அஸ்மிர் முன்வைத்ததோடு, அதன் 2022 ஆம் ஆண்டுக்கான அமுலாக்கல் திட்டத்தை அதன் தலைவர் சபைக்கு சமர்ப்பித்தார். இறுதியாக கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.எம்.ஸர்ஜூனின் நன்றியுரையோடு விழா இனிதே நிறைவுற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :