சாய்ந்தமருது பொலிவாரியன் கிராமிய அபிவிருத்தி சங்கம் மற்றும் மஸ்ஜிதுல் ஹிஜ்ரா பள்ளிவாசல் நிர்வாகக் குழு இணைந்து ஹிஜ்ரா பொலிவாரியன் குடியேற்ற கிராமத்தில் வாழும் பொதுமக்களிடமிருந்து பொதுவான குடும்பத் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளன.
இந்தத் தரவுகள் மனிதாபிமான உதவி மற்றும் எதிர்கால மேம்பாட்டு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதோடு இரகசியமாகவும் பேணப்படவுள்ளது.
பொதுத் தரவுகளை சேகரித்த பின், பொலிவாரியன் கிராமிய அபிவிருத்தி சங்கம் பல்நோக்கு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தரவை எளிதாக வடிகட்ட கணினிமயமாக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்கும்.
மேற்படி நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் அனுமதி மற்றும் மேற்பார்வையின் கீழ்.மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment