நிந்தவுர் பிரதேச 2022 ம் ஆண்டிற்கான அபிவிருத்தி வேலைத்திட்ட கலந்துறையாடல்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
2022 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டம் அண்மையில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் கலந்து சிறப்பித்ததோடு, நிந்தவூர் பிரதேச செயலக பிரதிப் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், முன்பள்ளிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், மற்றும்பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன் பள்ளிஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதில்விசேடமாக பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் 51 மில்லியன்ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிந்தவூர் பிரதேச மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது .இதில் 31 முன்பள்ளிகளுக்கு தலா ரூ 50000 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :