மட்டக்களப்பு மாவட்ட சீலாமுனை பிரதேசத்தைக் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது ஆண்டின் தேசிய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு அவருக்கான விருது இன்று (22) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வழங்கி வைக்கப்படவுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஊடகத்துறைக்குள் உள்நுழைந்து மக்களுக்கு பயன்தரும் விடயங்கள் பற்றிய ஆக்கங்கள், ஆரசியல் ஆய்வுக் கட்டுரைகள், விளையாட்டு மற்றும் அரசியல் செய்திகள், துறைசார்ந்த விஷேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ நேர்காணல் தொகுப்புக்கள், மூலிகையின் மருத்துவப் பயன்கள் பற்றிய பல பயன்தரும் விடயங்களை இன்றுவரை தொடராக எழுதி வருகின்றார்.
22 வது தேசிய விருதுக்காக இவரின் ஆக்கங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் இலங்கை பத்திரிகை பேரவையினால் சிறந்த ஊடகவியலாளராக தெரிவு செய்யப்பட்ட இவருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment