கேகாலை மாவட்டத்தின் அபலதொடுவையைச் சேர்ந்த கஸ்தூரி ஆராய்ச்சிலாகே குணரெத் மெனிகே 22.03.2022 இல் தனது 100 வயதினை புர்த்தி செய்கின்றார்.
இன்றும் திடகாத்திரமகவும் , தனது பணிகளை தானே நிறைவேற்றக் கூடியவராகவும் , கதைப் புத்தகங்களையும் வாசிக்கும் திறனையுடையவராகவும் உள்ளார்.
100 வருடங்களுக்கு முன் தேவாலேகமையில் பிறந்த இவர் பாணகாவ வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியினை பெற்றார்.
1944 ஆம் ஆண்டு பிங்தெனிய வித்தியாலய அதிபர் ஜீ.ஆர்.குலதுங்கவை திருமணம் செய்த இவர் தனது கணவர் அதிபராக செல்லும் பாடசாலைக்கு சென்று மாணவர்களுக்கு உதவியாக இருப்பதுடன் மாலை வேளைகளில் இலவசமாக கல்வியினையும் பொது அறிவினையையும் ஊட்டிவந்துள்ளார்.
0 comments :
Post a Comment