இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து எதிா்வரும் மாா்ச் 27ஆம் திகதி கொழும்பு -மாலைதீவு முதலாவது மாலைதீவு எயாலைன் விமானம்



அஷ்ரப் ஏ சமத்-
ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து எதிா்வரும் மாா்ச் 27ஆம் திகதி கொழும்பு -மாலைதீவு முதலாவது மாலைதீவு எயாலைன் விமானம் புறப்படுகின்றது. இந் விமான சேவைக்கான பிரவேசச் சீட்டுக்களை இலங்கையில் உள்ள நவலோக்க விமான ரவல்ஸ் சேவை நிறுவனம் செயற்படுத்துகின்றது.
இலங்கையில் பழமைவாய்ந்ததும் முதலாவது விமான நிலையமான இரத்மலானை விமான நிலையம் 54 வருடங்களுக்குப் பிறகு தேசிய விமானநிலையமாக 2022ல் மாற்றப்ட்டுள்ளது. என விமான சேவைகள் இராஜாங்க அமைச்சா் டி.வி.சாரக்கா தெரிவித்தாா்.

இரத்மலானை விமான நிலையத்தினை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இரத்மலானை விமான நிலையத்தில் இன்று (10) இராஜாங்க அமைச்சா் டி.வி. சாரக்கா தலைமையி்ல் நடைபெற்றது.

இவ் ஊடக மாநாட்டில் மாலைதீவு உயா் ஸ்தாணிகா் ஒமா் அப்துல் ரசாக், இலங்கை விமான நிலைய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் மேஜா் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ சந்திரசிரி, விமான நிலையம் விமான அதிகார சபையின் பணிப்பாளா் நாயகம் டெரிடர் டி.லிவாரா, நவலோக்கா விமான ரவல்ஸ் சேவை பொது முகாமையாளா் ரம்லி விலாகாசிம் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து அங்கு பணிப்பாளா் டெரிடா் டி லிவாரா மேலும் தகவல் தருகையில்

இரத்மலானை விமான நிலையம் கடந்த 54 வருடங்களுக்கு பிறகு தேசிய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தெஹிவளை கல்கிசை நுகேகொடைப் பகுதியில் கல்வி பயில்வதற்காகவும் , சுற்றுலாத்துறை , வைத்தியம் ஆகியவற்றுக்காக 12 ஆயிரம் மாலைதீவு மக்கள் வாழ்ந்து வருகின்றனா் இவா்கள் நாளாந்தம் பிரயாணங்களை மேற்கொள்கின்றனா்.. இதற்காக எதிா்வரும் மாா்ச் 27ஆ்ம் திகதி முதலாவது மாலைதீவு விமானம் மாலையில் இருந்து இரத்மலானை விமான நிலையத்த்திற்கு வந்தடையும் இவ் விமானங்கள் ஞாயிறு-செவ்-வியாழன் 0600-0840 மணிக்கும்
இரத்மலானையில் இருந்து மாலைக்கு 0940-1120 ஆகிய நேரங்களில் மூன்று நாட்கள் விமானங்கள் புறப்படும்.

இதற்காக இரத்மலானை விமான நிலையத்தில் சுங்கப்பிரிவு, போக்குவரத்து. சுற்றுலா, உணவுப் பிரிவு, வங்கி போன்ற சகல வசதிகளையும் விமான நிலைய அதிகார சபையே செயற்படுத்தப்படுகின்றது. விமானத்தின் ஓடுபாதைக்காக 500 மில்லிய்ன் ருபாவினை ஒதுக்கி விமான நிலைய அடிப்படை வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. விமானத்நிலையத்திற்கு ஒன்றரை மணித்தியாலயங்கள் முன்பாகவே சமுகமளிக்கமுடியும். மாலே -கொழும்பு ஒரு வழிப்பாதைக்காக ருபா 45 ஆயிரம் ருபா பிரவேசச் சீட்டு விற்பனையாகும். ஒரு விமானத்தின் 50 -70 ஆசனங்கள் உள்ளன. இதனால் இலங்கைக்கு அந்நிய நாட்டுச் செலவனி கிடைக்கும். எனவும் பணிப்பாளா் தெரிவித்தாா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :