அவர் முக்கியமான எம்.பி. ஆனால் இந்தப் பிரச்சினையை இழுத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறார். உங்கள் காலத்தில் கோவிட் நெருக்கடி இல்லை. ஆனால் எரிபொருளை கொண்டு வர முடியவில்லை. எரிவாயு கொண்டு வர முடியவில்லை. இன்று முழு உலகமும் நெருக்கடியை எதிர்கொள்ளும் காலம். ஜப்பானை பார்த்தால் இந்த வாரம் எல்லாவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் அப்படித்தான். நீங்கள் கிணற்றில் தவளை போல் நடந்து கொள்ளாதீர்கள். நீங்கள் மிகவும் முதிர்ந்த அரசியல்வாதி. அத்தகைய தாழ்ந்த நிலைக்கு விழ வேண்டாம். பரந்த மனப்பான்மையுடன் இருங்கள். மிகவும் குறுகலாக சிந்திக்க வேண்டாம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2014 ஆம் ஆண்டு தம்புள்ளைக்கு அதிவேக நெடுஞ்சாலை பணிகளை ஆரம்பித்தார். ஆனால் நீங்கள் அவற்றை ரத்து செய்ததால் இன்று அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் எடுத்த தவறான முடிவு தான் இதற்குக் காரணம். அன்று நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தால், எண்ணெய் எரிப்பது குறைந்திருக்கும். மாகாணங்களில் சொத்துக்களின் விலை உயர்ந்து வருகிறது. தொற்றுநோய் பரவினாலும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்வதை நிறுத்த வேண்டாம் என எமது ஜனாதிபதி எங்களிடம் கூறினார். வீதிகள் அமைப்பதை நிறுத்த வேண்டாம் .எப்படியாவது முன்னெடுக்குமாறு பணித்துள்ளேன். அதனால்தான் களனி பாலத்தை கட்டி முடிக்க முடிந்தது. கோவிட் காரணமாக நாம் அவற்றை முன்னெடுக்காதிருந்தால் ஒரு வருடத்திற்கு நிறைவு செய்ய முடியாது. எனவே எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் இந்நாட்டின் அபிவிருத்தியை தடுத்து நிறுத்தக்கூடாது என்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது.
எண்ணெய் பிரச்சினை உள்ளது . எரிவாயு பிரச்சனை உள்ளது. ஆனால் எல்லா விடயங்களிலும் டாலர் பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.
. எனவே, இந்த அழிவுக்கு நீங்களே பொறுப்பு. இதிலிருந்து தப்பிக்க முடியாது. அரசியல் பேசுவது மிகவும் எளிது. ஆனால் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததே உங்கள் அரசுதான். உங்கள் காலத்தில் கோவிட் நெருக்கடி ஏற்பட்டிருந்தால் இந்த நாடு நாசமாகிவிடும். இந்த நாடு முழுதும் மயானமாகிவிட்டது.
இவை எதுவும் இல்லாமல், உலகப் பொருளாதார நெருக்கடி இல்லாமல் உங்களால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாவிட்டால், கோவிட் நெருக்கடியின் போது நீங்கள் எவ்வாறு பொருளாதாரத்தை நிலைநிறுத்தியிருப்பீர்கள்? எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்றே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்த அனைத்து சவால்களுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. சகல பிரச்சினைகளுக்கும் பதிலளிக்கு; திறமை அவருக்கு உள்ளது.அரசியல் செய்யாமல் நாட்டு மக்களின் உயிரையும், ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாத்தார். அவர் சிறந்த தலைவராக வரலாற்றில் இடம் பெறுகிறார். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டில் அபிவிருத்தி எமக்கு டொலர் பிரச்சினை உள்ளது. அந்தப் பிரச்சனையை நாங்கள் எதிர்கொண்டு தீர்த்து வைப்போம். நாங்கள் உலகம் முழுவதும் சென்று எமக்கு உணவளிக்குமாறும் கொஞ்சுவதாக சொன்னீர்கள். மன்றாடியாவது இந்நாட்டு மக்களை பட்டினியில் வாடாமல் பாதுகாப்போம். உணவுப் பற்றாக்குறை ஏற்படும், நாடு அழிந்துவிடும் என்றீர்கள். இந்த நாட்டின் அபிவிருத்தி தொடரும் என்பதை நாம் தெளிவாக கூறுகின்றோம். இந்த சவால்களை நாம் நிச்சயமாக எதிர்கொண்டு இந்த நாட்டை வெல்வோம். இந்நாட்டு மக்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்த போது,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்றில் இடம்பெறுவார் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செய்த செயல்களால் மதன' உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்பதை மரியாதையுடன் நினைவுபடுத்துகிறேன். இந்த நாட்டு மக்களும், உங்களுக்கு வாக்களித்த மக்களும், எமக்கு வாக்களித்த மக்களும் காப்பாற்றப்பட்டனர். . 200,000 பேர் இறப்பார்கள் என்றீர்கள். ஆக்ஸிஜன் இல்லை என்றீர்கள். நீங்கள் சொன்ன பொய்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது. எண்ணெய் கொண்டு வர டாலர்கள் இல்லை. ஆனால் தார் கொண்டு வரப்படுவதாக கூறினீர்கள்.. ஆனால் அரசு தார் கொண்டு வருவதில்லை. தனியார் மூலம் தார் கொண்டுவரப்படுகிறது. கோவிட் தொற்றுநோய் நிலைமையிலும் இந்த நாட்டில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது
கொவிட் பிரச்சினை இல்லாத நிலையிலும் மக்களுக்கு வரிசையில் இருக்க நேரிட்டது. கப்பல் வரும்வரை காலிமுகத்திடலில் காத்திருக்க நேர்ந்தது,
உங்கள் தரப்பு 1.5 மில்லியன் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது. உங்கள் கட்சிக்கு பல பிரச்சினைகள் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் நிரம்பியுள்ளனர். எனவே எதிர்க்கட்சித் தலைவர் பாதுகாக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாங்களும் இருக்கிறோம். அதனால் பைசர் தடுப்பூசி ஏற்றி ஜனாதிபதி கோத்தபாய அவரை பாதுகாத்தார். அவர் இருக்க வேண்டும். அவர் பாதுகாக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் எண்ணெய் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். வாயு பிரச்சினைகளை தீர்ப்போம். இவை தற்காலிகமான பிரச்சினைகள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த சவாலை நாம் நிச்சயமாக வெற்றிகொள்வோம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...
எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கேள்வியை 27/2 இன் கீழ் கேட்கப்பட்டிருந்தால் அரசாங்கத்தினால் அதற்கு பதிலளிக்க முடியும். நேற்று புதிதாக ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவர் இருக்க வேண்டிய ஒருவராகும். எண்ணெய் திருட்டு நடக்கப் போகிறது என்று இப்போது சொல்கிறீர்கள். ஆனால் எண்ணெய், எரிவாயு இல்லை என்கிறீர்கள். ஆனால் மூன்று நாடுகள் எரிவாயு மற்றும் எண்ணெய் வழங்க தயாராக உள்ளதாக பிரச்சார கூட்டத்தில் கூறுகிறீர்கள். அந்த மூன்று நாடுகளிலிருந்தும் எண்ணெய் கொண்டு வந்தால் அது மாபெரும் வெற்றியாகும். மக்கள் உங்களை வெகுவாக மதிப்பார்கள். நாட்டையும் மக்களையும் நேசிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்று மக்கள் உங்களை போற்றுவார்கள். அரசியல் வேறுபாடுகள் இன்றி தனது நாட்டு மக்களைக் காக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டாக கூறுவார்கள். அந்த மரியாதையை பெறுங்கள். அந்த மூன்று நாடுகள் இருந்தால் விரைவாக உதவுமாறு அவர்களிடம் கேளுங்கள். உதவி செய்யுமாறு பணிவாக கோருகிறேன். நீங்கள் எப்போது ஆட்சிக்கு வருவீர்கள் என்று தெரியாது. எனவே நீங்கள் ஆட்சியில் இல்லாத நிலையில் இந்நாட்டு மக்களுக்கு இது போன்ற ஒன்றை செய்தால் மிகவும் நல்லது. உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஜே.வி.பி பிரச்சினை இருந்த போது திருமதி பண்டாரநாயக்க ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் உங்கள் தந்தைக்குடம் உதவிய காலம் ஒன்று இருந்தது. அரசியல் பேதமின்றி இந்த நாடுகளுக்காக எண்ணெய் பிரச்சினையை தீர்க்குமாறு கேட்கிறோம். ஜனாதிபதி கோட்டாபயவால் எரிவாயு பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. எனவே நீங்கள் அந்த மரியாதையை எடுத்துக் கொள்ளுங்கள்.
சஜித் பிரேமதாஸ எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ -
நீங்கள் எப்போது ஆட்சிக்கு வருவீர்கள் என்று தெரியாது. யார் திறமையானவர் திறமையற்றவர் என்பது தேர்தலில் முடிவு செய்யப்படும். யார் திறமைசாலி, யார் திறமையற்றவர் என்பது இரண்டு தேர்தல்களில் மக்கள் முடிவு செய்தனர்.உங்களால் முடிந்தால் அந்த எண்ணெயை கொண்டு வாருங்கள். .
சஜித் பிரேமதாச -
இச்சபையில் முன்வைக்கும் கருத்துக்களை வரிசையில் நிற்கும் மக்களுக்கு முன்வைக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இராஜதந்திர கொடுக்கல் வாங்கல்கள் அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தான் நடைபெறுகிறது அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில்லல்ல என்றார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ -
இந்த பிரச்சினை இன்னும் சில வாரங்கள் இருக்கும். அவரின் காலத்தில் மீண்டும் எண்ணெய் பிரச்சினை வராது. இந்த பிரச்சினைகளை நாங்கள் தீர்ப்போம். வரிசையில் நிற்கும் யுகம் முடிவுக்கு வரும். வரிசையில் இருப்பவர்களிடம் சென்று பேசுமாறு சொன்னார். நான் எங்கு வேண்டுமானாலும் சென்று பேச முடியும். கிராமங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். காலிக்குப் போயிருந்தேன். சுமார் ஆயிரம் பேர் முன்னிலையில் நான் பேசினேன்.
சஜித் பிரேமதாச -
எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் . செய்து காட்டுவோம்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
அவருடைய அரசாங்கம் வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். அவருக்கு இப்படி ஒரு சிறிய சந்தோசம் பெறுவதை நாம் எதிர்க்கவில்லை.
0 comments :
Post a Comment