தரம்5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்முனை வலயத்தில் வெட்டுப்புள்ளிகளுக்குமேல் 442 மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர் என கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் செல்லத்துரை புவனேந்திரன் தெரிவித்தார்.
கடந்த வருடம் 377ஆகவிருந்த இச்சாதனை இம்முறை மேலும் 65ஆல் அதிகரித்திருப்பது குறித்து பாராட்டுத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வலயத்திலுள்ள கல்முனைக்கோட்டத்தில் 145பேரும் ,கல்முனை தமிழ்க்கோட்டத்தில் 115பேரும், சாய்ந்தமருதுக்கோட்டத்தில் 83பேரும் ,நிந்தவூர்கோட்டத்தில் 59பேரும் ,காரைதீவுக்கோட்டத்தில் 40பேரும் சித்தியடைந்துள்ளனர்.
கல்முனை வலயத்தில் தனியொரு பாடசாலை 82அதிகூடிய மாணவர்களை சித்தியடையச்செய்திருப்பது கல்முனை கார்மேல் பற்றிமா தேசியக்கல்லூரியிலாகும். அங்கு அதிகூடிய புள்ளியாக 185புள்ளிகளை ஒரு மாணவன் பெற்றுள்ளான்.
கல்முனை வலயத்தில் அதிகூடிய புள்ளியான 191புள்ளிகளை சாய்ந்தமருது அல்ஹிலால் மகா வித்தியாலய மாணவர் பெற்றுள்ளார்.இந்தப்புள்ளி அம்பாறை மாவட்டத்தில் முதல்நிலை புள்ளியாகும்.அங்கு 58மாணவர்கள் சித்திபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment