சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக் கழகத்திற்கும் , புனொச்சிமுனை விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து சினேகபுர்வ கிறிக்கட் போட்டி அண்மையில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில் ஈடுபட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக் கழகம் 18 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய புனொச்சிமுனை விளையாட்டு கழகம் 18 ஓவர்களில் விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுக் கொண்டது.
சாய்ந்தமருது லம்கோ அணி சார்பில் பயாஸ் 36 பந்து வீச்சுகளுக்கு 55 ஓட்டங்களையும் , ஹஸ்னாத் 35 பந்து வீச்சுகளுக்கு 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பயாஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் , பிர்தௌஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 32 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினையும் கைப்பற்றினர்.
புனொச்சிமுனை அணி சார்பில் ஏ.பி.எம்.ஸஜி 38 பந்து வீச்சுகளுக்கு 50 ஓட்டங்களையும் , சப்ஹான் முஹம்மட் 35 பந்து வீச்சுகளுக்கு 24 ஓட்டங்களையும் பெற்றனர் . அப்துல்லாஹ் நவாப் 3 ஓவர்கள் பந்து வீசி 29 ஓட்டங்களுக்னு 1 விக்கட்டினையும் , நௌபர் ஆதம் 4 ஓவர்கள் பந்து வீசி 36 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினையும் கைப்பற்றி இருந்தனர்.
0 comments :
Post a Comment