கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் நேரடியாக சென்று வாழ்த்து
அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் 58 மாணவர்களும் , சாய்ந்தமருது முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலையில் 16 மாணவர்களும் , சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையில் 4 மாணவர்களும் , சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் , அல் ஜலால் மற்றும் அல் கமநுன் வித்தியாலயங்களில் தலா ஒரு மாணவருமாக மொத்தம் 83 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப்பரிசில் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
சாய்ந்ந்தமருது கல்வி கோட்ட வரலாற்றில் பெரும் தொகையான மாணவர்கள் சித்தியடைந்து இருப்பது இதுவே முதற்தடவையாகும் என சாய்ந்தமருது கோட்ட கல்விப்பணிப்பாளர் என்.எம்.அப்துல் மலீக் தெரிவித்தார்.
கல்முனைக் கல்வி வலயம் அம்பாறை மாவட்டத்தில் முதலாம் , இரண்டாம் நிலைகளை பெற்றிருப்பதுடன் இந்த பரீட்சை முடிவுகளை பெறுவதற்கு காரணமாக அமைந்த பாடசாலை அதிபர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்முனை வலய கல்விப் பணப்பாளர் எஸ்.புவனேந்திரன் நேரடியாக பாடசாலைகளுக்கு சென்று தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்
சாய்ந்தமருது கோட்டத்தில் 70 புள்ளிகளுக்கு மேல் 150 மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment