எதிர்வரும் 5ம் திகதி முதல் மின்சார தடையை நிறுத்தக்கூடிய சாத்தியம் உள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று கபினட் சபையினர்க்கு தெரிவித்துள்ளார்.மார்ச் மாத முடிவில் போக்குவரத்து பிரச்சனைக்கும் முடிவுகள் எட்டப்பட்டு, சாதாரண நிலமைக்கு திரும்பலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து போன்றவற்றுக்கு தேவையான எரிபொருள்களை வழங்க பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தவிர்த்து, போக்குவரத்து அமைச்சுக்கு பொறுப்பளிக்க யோசனைகளை வழங்கி உள்ளார்.
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் அல்லது கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்குவது குறித்தும் அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment