அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களுள் ஒன்றான இறக்காமத்தில் இலுக்குச்சேனை முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவி ஜிப்ரி சனா சபியா அண்மையில் வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று ஒரு குடும்ப வரலாற்று சாதனையை பதிவிட்டுள்ளார்.
இறக்காம்ம் , வாங்காமம் பிரதேசத்தில் வதியும் இம் மாணவியின் கூடப்பிறந்த சகோதர சகோதரிகள் 4 பேர் தொடர்ச்சியாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தே வந்துள்னர்.
கொரோனா கெடுபிடிகளுக்கு மத்தியில் சவாலை ஏற்று சாதித்து ஐந்தாவது புலமை வென்று பெருமை சேர்த்திருக்கிறார் இம் மாணவி சனா ஷபியா.
வாங்காமத்தைச் சேர்ந்த ரோஷான் ஏ.ஜிப்ரி - றம்ஸியா தம்பதிகளின் ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐவரும் தொடரான புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
பாடசாலை அதிபர் முஹம்மட் ஹாறுதீன் உள்ளிட்ட கற்பித்த ஆசிரிய ஆசிரிகைகளுக்கும் இம்மாணவி தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
0 comments :
Post a Comment