தரம்; 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயம் கல்முனை கல்வி வலயத்தில் முதலிடம்.



பி.எம்.எம்.ஏ.காதர்-
2021ஆம் ஆண்டுக்கான தரம்; 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயம் கல்முனை கல்வி வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் ஐ.உபைதுல்லாஹ் தெரிவித்தார்.இப்பாடசாலையில் 52 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 21 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.ஏனைய எல்லா மாணர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மாணவன் எம்.ஐ.ஏ.மிஸ்ரப் அபூபக்கர் 173 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடத்தில் உள்ளார்.

கல்முனை கல்வி வலயத்தில் மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயம் நூறு வீதம் சித்தி பெற்று வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதை பாராட்டும் வகையில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்;.எல்.அப்துல் றஹீம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (2022-03-15)பாடசாலைக்கு வருகைதந்து அதிபர் ஐ.உபைதுல்லாஹ்வை பாராட்டியதுடன் கற்பித்த ஆசிரியர்களான எம்.எல்.எம்.நௌஷாட்,எம்.எச்.எஸ்.மூபீனா ஆகியோரையும் பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்கனையும் பாராட்டியுள்மை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :