ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெறும் மாணவர்களே சித்தி பெற்றதாகக் கருதப்பட்டு பாராட்டடி கௌரவிக்கப்படுவது வழமை.ஆனால் 70 புள்ளகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் பாராட்டி கற்றல் உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட சம்பவமொன்று இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசு ஆதவன் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் சென்ட்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் தேசமான்ய ஏ.எல்.மீராசாபினால் குறித்த நிறுவனத்தினால் இக்கௌரவிப்பு நிகழ்வு இடமபெற்றது.
அல் இக்பால் வித்தியாலயத்திலிருந்து சித்தியடைந்த மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment