லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 78வது பட்டமளிப்பு விழா



லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 159ம் ஆண்டு விழா 78ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று 10.03.202 காலை 9.00 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
ஜாமிஆ தலைவர் ஹாஜி J.அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் ஜாமிஆ செயலாளர் K.A.அமானுல்லாஹ் வரவேற்றார்.
பட்டமளிப்பு பேருரை மவுலவி சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத், சிந்தாமணிபட்டி மதராசத்துல் ஸஊதிய முதல்வர் மவுலவி சிராஜுதீன் அஹ்மது ரஷாதி ஹள்ரத் , திருச்சி மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவுலவி A.முஹம்மது சிராஜுதீன் ஹள்ரத் மற்றும் ஜாமிஆவின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தவ்ரத்துல் ஹதீஸ் மவ்லவி ஃபாஜில், மவ்லவி ஆலிம், ஹாஃபிழ் ஆகியோருக்கு ஜாமிஆ முதல்வர் மவுலவி A.நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். ஜாமிஆ பொருளாளர் ஹாஜி S.A.அப்துல் அஹது நன்றி கூரினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :