இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் Pro Knights Chess Academy சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது I.K.முஹம்மட் ஆக்கில் கான் அடுத்த சுற்றான B பிரிவில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இவ் சதுரங்க போட்டித்தொடர் 25.02.2022 தொடக்கம் 01.03.2002 வரை பொலநறுவை ரோயல் கல்லூரியில் இடம்பெற்றது.
வயது வரையறைகள் இன்றி ஆண்களுக்கு தனியாக நடாத்தப்பட்ட
இப்போட்டிகள் 7 சுற்றுக்களைக் கொண்டதாக அமைந்திருந்ததுடன் சுமார் 40 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பல சர்வதேச தரப்படுத்தல் போட்டியாளர்களுடனும் விளையாடி இவர் நான்காம் இடத்தை பெற்று மேற்படி போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளார்.
இவர் சாய்ந்தமருது Pro Knights Chess Academy சார்பாக போட்டியிட்டதுடன், கல்முனை ஸாஹிரா கல்லூரி தரம் 7 யில் கல்விபயில்கிறார். MK.இர்ஷாட் கான் ஆசிரியர் மற்றும் S.தஸ்லீன் ஆகியோரின் புதல்வரான இவர் இப் போட்டித் தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் அம்பாரை மாவட்ட வீரர் ஆவார்.
மேலும் Pro Knight Chess Academy யின் பணிப்பாளர் ஸாக்கீர் அஹமட் அவர்களின் பயிற்றுவிப்புடனேயே ஆக்கில் கான் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment