"மக்களை நோக்கி நாம்" வேலைத்திட்டத்தின் பொது கள விஜயம் ஆரம்பம்



நூருல் ஹுதா உமர்-
பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவைகளை வழங்கும் மிக முக்கியமான பொறுப்புவாய்ந்த அரச நிறுவனம் என்றவகையில் அதனூடாக வழங்கப்படும் சேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் மற்றும் சிரமங்கள், போக்குவரத்து அசௌகரியங்கள், நேர வீண்விரயம் இன்றி மக்கள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அவர்களது காலடிக்குச் சென்று சேவைகளை வழங்கும் விஷேட வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் இறக்காமம் பிரதேச செயலகத்தினால் மக்களுக்கான சேவைகளை அவர்களது காலடிக்குச் சென்று வழங்கும் நோக்குடன் "மக்களை நோக்கி நாம்" வேலைத்திட்டத்தின் கீழ் "பொது கள விஜயம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் ஒரு கிராம சேவகர் பிரிவு என்ற ரீதியில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் இவ்வேலைத்திட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது. "பொது கள விஜயம்" வேலைத்திட்டம் ஊடாக மக்களுக்கான சேவைகள், வழிகாட்டலகள் ஆலோசனைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்பன வழங்கப்படன.

அதில் முதியோர் அடையாள அட்டை, முதியோர் கொடுப்பனவு தொடர்பான வழிகாட்டல், விஷேட தேவை உடையவர்களுக்கான சேவை, சுய தொழில் ஊக்கிவிப்பு, பொதுசன மாதாந்தக் கொடுப்பனவு, காணி தொடர்பான பிரச்சினை, உளவளத்துணை சேவை, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினுடைய சேவைகள், உற்பத்தித் திறன் மேம்பாடு, சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு வழிகாட்டல்கள், விளையாட்டு, திறன்மேன்பாடு மற்றும் இளைஞர் விவகாரம், டெங்கு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கட்டுப்படுத்தலுக்கான நடவடிக்கைகள், சமுர்த்தி திணைக்களத்தின் சேவைகள், ஆயுர்வேத மருத்துவ வழிகாட்டல் சேவைகள், அனர்த்த சேவைகள், விவசாய விரிவாக்கள் சேவைகள், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து சேவை, சிறுவர் கழங்களுக்கான சேவைகள் வாழ்வாதர உதவிகள் வழங்கப்பட்ட இடங்களுக்கான மேற்பார்வை என்பன இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் என்.எம். ஆசிக் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரிவுகளுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டதோடு மக்களின் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு உடனடித் தீர்வுகளும் தேவையான ஆலோசனை வழிகாட்டல்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :