ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் கழிவுகள் அகற்றப்படவில்லை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பிரதேச சபை பிரிவில் அல் அக்ஷா வீதியில் பொது மக்களால் போடப்பட்ட கழிவுகள் பிரதேச சபையினால் கடந்த நான்கு நாட்களாக அகற்றப்படவில்லை என்று பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து வாழைச்சேனைக்கு செல்லும் வீதியில் புகையிரத பாihயை கடந்தும் வலது பக்கம் முதலாவது வரும் வீதியே அல் அக்ஷா வீதியாகும் அவ் வீதியின் ஆரம்பத்திலயே புகையிரத வீதிக்கு அருகில் பிரதேச பொது மக்களால் தங்களது வீட்டு கழிவுகளையும் வியாபாரிகள் தங்களது வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளையும் அவ்விடத்தில் வீசவதனால் அப்பகுதியால் பிரயாணிக்கும் பிரயாணிகள் பல் வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாகிகிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பிரதேசத்தில் பிரதேச சபையினாள் நாளாந்தம் கழிவகளை அகற்றும் பணிகள் இடம் பெறுகின்ற போதிலும் இவ் விடத்தில் குவிக்கப்பட்டுள்ள மறக்கரி கழிவுகள், பொலிதீன், விட்டு கழிவுகள் என்பன அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதியால் பயணிக்கும் பிரயாணிகளும் அவ்விடத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீனை தொடர்பு கொண்டு வினவிய போது ஓட்டமாவடி பிரதேச சபையினால் நாளாந்தம் குப்பைகளை அகற்றும் பணிகள் சிறப்பாக இடம் பெறுவதோடு உக்கக்கூடிய குப்பைகள் வேறாகவும் உக்காத குப்பைகளை வேறாகவும் வேறுபடுத்தி தருமாறு பதாதைகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதடன் ஒலி பெருக்கி மூலம் பிரதேசத்தில் அனைத்து வீதிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டும் சிலரால் இவ்வாறு கழிவுகளை பிரதேசத்தில் பல பகுதிகளில் போடுவதால் சபையினால் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கழிவுகள் இரண்டு நாட்களுக்குள் துப்பரவு செய்யப்படுவதுடன் குறித்த பகுதிகளில் கழிவுகளை போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :