கல்முனை மக்களை ஏமாற்றும் கேஸ் மாபியாக்கள்!



சர்ஜுன் லாபீர்-
நாட்டில் உள்ள தற்போதைய சூழ்நிலையில் எரிவாயு பிரச்சினை என்பது உச்சம் தொட்டுள்ளது என்பது யாவரும் அறிந்த விடயம் ஆனாலும் கல்முனையில் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் யாரும் மக்கள் காலடியில் சென்று நேரடியாக இதுவரை எரிவாயு விநியோகம் செய்ததாக நான் அறிந்த வகையில் தகவல்கள் இல்லை.
மாறாக நேற்று சனிக்கிழமை கல்முனை வாடி வீட்டு வீதியில் கேஸ் விநியோகம் செய்யப்படும் என்ற பொய்யான வதந்தியை பரப்பி மக்களை கேஸ் சிலிண்டர்களுடன் அலையவிட்டு ஏமாற்றம் செய்துள்ளார்கள் இந்த கேஸ் மாபியாக்கள்.
அதேநேரம் இன்று கல்முனை கடற்கரை வீதியில் மஸ்ஜிதுல் பலாஹ்க்கு அருகில் உள்ள மைதானத்தில் சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று மீண்டும் ஒரு வதந்தியை பரப்பி அதிகாலை 4 மணியில் இருந்து மக்களை காத்திருக்க வைத்து ஏமாற்றி இருக்கின்றார்கள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் எவ்வளவு கஸ்டங்களுக்கு மத்தியில் தினசரி கூலி வேலை செய்யும் மக்கள் கூலி வேலைகளுக்கு செல்லாமல் வரிசையிலும், வெயிலிலும் மணித்தியாலக்கணக்கில் காத்து இருந்து ஏமாற்றம் அடைந்து செல்கின்றார்கள். அதேவேளை தூர இடங்களில் இருந்து முச்சக்கர வண்டிகளில் பிரயாணம் செய்து வெற்று கேஸ் சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு அவதிப்பட்டு ஏமாற்றம் அடையும் செயற்பாடு கடும் வேதனையை தருகின்றது.

இதே வேளை கல்முனையில் கேஸ் மாபியாக்களின் ஊடுருவல் என்பது தலை விரித்தாடுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த ஊர்களில் கேஸ் வழங்கப்படுகின்றதோ அங்கெல்லாம் இந்த கேஸ் மாபியாக்கள் சென்று வரிசையில் நின்று கேஸ்களை பெற்றுக்கொண்டு 5500/- தொடர்க்கம் 7000/- வரை விற்பனை செய்து இன்னும் இன்னும் மக்களுக்கு சுமைகளையும் கஸ்டங்களையும் கொடுக்கின்றார்கள்.வரிசையில் நின்று காத்துகொண்டு இருப்பதனை விட கேஸ் மாயியாக்களிடம் கூடுதல் விலை கொடுத்தாவது அதனை கொள்வனவு செய்வோம் என்ற நோக்கில் மக்கள் எப்படியாவது மாபியாக்களிடம் கேஸ்களை பெறுவதற்கு முந்தியடிக்கின்றார்கள்.

எனவே ஒரு புறம் கேஸ் நாளை இந்த இடத்திற்கு வரும், இன்று இந்த இடத்திற்கு வரும் என்று பொய்களை கூறி ஏமாற்றும் கூட்டம் அதேவேளை கேஸ் தட்டுப்பாட்டினை வைத்து உழைப்பு நடத்தும் ஈணசாதி கூட்டம் மறு புறம் இவ்விரண்டுக்கும் இடையில் மக்கள் அல்லோலகல்லோல படும் நிலை மிகவும் மனவேதனையாக உள்ளது.

அன்புள்ளம் கொண்டவர்களே! ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு மாதத்திற்கு ஒரு முறை மக்கள் வீடுகளில் பாவனை செய்யும் சமையல் எரிவாயு விடயத்தில் தயவு செய்து உங்கள் கள்ளத்தொழில்கலையும், ஏமாற்று பித்தளாட்டங்களையும் செய்யாதீர்கள். எதிர்வரும் புனிதமான ரமழான் மாதத்தில் மக்கள் இவ்வாறான ஏமாற்றங்களை காணாமல் நிம்மதியாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வழிவிடுங்கள் அவர்களை வாழவிடுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :