கட்டாக்காலி மாடுகளால் பொது மக்கள் அவதி;தெய்வீகமாக ஒரு குடும்பம் உயிர் தப்பியது.#சம்மாந்துறை



ஐ.எல்.எம் நாஸிம்-
ம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில்உலாவித்திரியும் கட்டாக்காலி மாடுகளால் நேற்று இரவு 10 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் வீதியில் கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியது.தெய்வீகமாக காரில் பயணித்தோர் உயிர் தப்பினர்.

இது குறித்து சம்மாந்துறை பிரதேச சபையிடம் பல முறை சுட்டி காட்டிய போதும் ஆக்கபூர்வமானநடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இரவு நேரங்களிலும் வீதி விளக்குகள்அணைக்கப்படுகின்றது.ஆகவே கட்டாக்காலி மாடுகள் வீதியில் உலாவித்திருந்தால் எதிர் வரும் காலங்களில்வீதி விபத்துக்கள் அதிகரிக்கும் என மேலும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

எனவே, பிரதேச சபை ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :