இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இப்பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுகின்ற நிருவாக உத்தியோகத்தர்களுக்கான 'திறன் மேம்பாட்டுத் திட்டம்' எனும் தலைப்பிலான பயிற்சிப்பட்டறை அபிவிருத்தி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் (03) அதன் பணிப்பாளர் பேராசிரியர் ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள நிருவாக உத்தியோகத்தர்களின் திறன்களை மேலும் வளப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிப்பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பயிற்சிப்பட்டறை நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ், கௌரவ அதிதியாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மற்றும் இப்பயிற்சிப்பட்டறையின் வளவாளராக ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பதிவாளர் கலாநிதி ஏ.எல்.ஜௌபர் சாதீக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment