கம்பராமாயணத்தில் இலங்கையின் வகிபாகம் பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்வு.



றஸீதா பாத்திமா-
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்று புலவர்களால் போற்றப்படும் ஓர் காவியன் கம்பன், கம்பனுடைய கவித்திறமையை அவன் எழுதிய காப்பியங்கள் பறைசாற்றுகின்றன. அந்த வகையில்
கம்பர் பற்றியும் அவரால் எழுதப்பட்ட கம்பராமாயணம் பற்றியும் ஒரு மீள்பார்வை நிகழ்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கரின் ஆலோசனையுடன் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுதீனின் தலைமையிலும் பல்கலைக்கழக நூலகம் முன்னெடுத்து வரும் "புத்தக் கண்காட்சி" எனும் முன்மாதிரித் திட்டத்தின் ஒரு அங்கமாகவே மேற்படி நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன் நோக்கமானது பல்கலைக்கழக மாணவர்களுட்பட பல்கலைக்கழக சமூகத்தினரின் வாசிப்புத்திறனை விருத்தி செய்யும் நோக்குடன் உலகப் பெரியார்கள், அறிஞர்கள், எழுத்தாளர்களை முதன்மைப்படுத்தி இந்த புத்தகக் கண்காட்சி செயற்திட்டம் தொடராக இடம்பெற்று வருகின்றது.

புத்தகக் கண்காட்சி செயற்திட்டத்தின் ஆறாவது தொடராக கம்பர் பற்றிய அறிமுகத்துடன் கம்பராமாயணம் பற்றிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த்துறை தவிசுப் பேராசிரியர் எம்.ஏ.எம். றமீஸ் அவர்கள் பிரதம அதிதியாக் கலந்து கொண்டதுடன் கம்பராமாயணம் பற்றியும் அதனைத் தான் பார்க்கும் விதம் மற்றும் அந்நூல் தற்காலத்திலும் பேசப்பட்டு வருவதனையும் அதன் அவசியம் குறித்தும் கருத்துரைத்தார்.

தொடர்ந்து நூலகர் றிபாயுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலை கலாசார பீட தமிழ் சிறப்பு தேர்ச்சி, இறுதியாண்டு மாணவி ஆர். சிவரஞ்சனி, கம்பர் பற்றியும் அவரின் கம்பராமாயணம் எனும் நூல் குறித்தும் இலங்கைக்கும் இராமாயணத்திற்குமான தொடர்பு குறித்தும் ஆய்வுடன் கூடிய முக்கிய உரையாற்றினார்.
தொடர்ந்து நூலகர் உரையாற்றுகையில், சமூகத்திற்காகவும் கல்விக்காகவும் செய்யும் இத்தகைய பணிகள், செயற்பாடுகள் பீடங்களிலும் நூலகத்திலும் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :