இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாமை சந்தித்தார்.



நூருல் ஹுதா உமர்-
லங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோருக்கும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம் அவர்களுடனான சந்திப்பொன்று பங்களாதேஷ்
உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், எமது நாட்டில் கல்வி, விளையாட்டு, வெளிவிவகாரம் மற்றும் சுற்றுலா துறை போன்றவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் மேலும் அதில் உள்ள குறைகள் குறித்தும் மேலும் இத்துறைகளில் பங்களாதேஷ் நாட்டின் இளைஞர்களின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் பின்னர், இலங்கையின் வெளியுறவுத்துறை மற்றும் சுற்றுலா துறை மேலும் வளர்வதற்கான தேவைப்பாடுகள் குறித்தும் விசேடமாக இலங்கை, பங்களாதேஷ் இளைஞர்களின் உறவுகளை வலுப்படுத்தும் செயற்திட்டங்களுக்கான ஆதரவினை எதிர்காலங்களில் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :