நிந்தவூர் டாக்டர் அன்ஜாஸல்லாஹ்; வைத்தியத்துறை பட்டப்பின்படிப்பு இறுதிப் பரீட்சையில் சித்தி



அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த டாக்டர். மீராசாஹிபு அன்ஜாஸல்லாஹ் தனது மூன்று வருட சத்திர சிகிச்சை முதுமானிப் பட்டப் பின்படிப்பை நிறைவுசெய்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இறுதிப் பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளார்.
அத்துடன் அவருக்கான இறுதிப்பரீட்சையின் பெறுபேற்று அடிப்படையில் சிறந்த மாணவராகத் தெரிவு செய்யப்பட்டு டாக்டர் உபாலி பானகல ஞாபகர்த்த தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியத் துறைக்கான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தால் நடத்தப்பட்ட சத்திரசிகிச்சை முதுமானிப் பட்டப்பின்படிப்புக்கான பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிமாவார்.
இவர் தற்போது ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணராக கடமையாற்றுகிறார்.
இவரது சிறந்த அடைவினால் தனது வைத்தியத் துறையில் விசேட கல்வியை மேற்கொள்ள அடுத்த வருடமளவில் இங்கிலாந்து செல்லவுள்ளார்.
ஏற்கெனவே இவரது குடும்பத்தில் டாக்டர். றஸீன் ஆதம் அவர்கள் சத்திரசிகிச்சை நிபுணராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :