மர்ஹூம் எம்.எச்.ஏ சமத் அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் துஆப் பிராத்தனை நிகழ்வு



அஷ்ரப் ஏ சமத்-
கடந்த ஜனவரி 31ல் காலமான ஓய்வு பெற்ற தொழில்நுட்பக் கல்லுாாி அதிபா் எம்.எச்.ஏ சமத் அவா்கள் பற்றிய நினைவேந்தல் மற்றும் துஆப் பிராத்தனையும் நிகழ்வொன்றினை அம்பாறை மாவட்ட தொழில் பயிற்சி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஸ்ட போதானாசிரியா்களினால் ஏற்பாடு செய்திருந்தனா். இந் நிகழ்வு நிந்தவூரில் உள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் 01.03.2022ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வுக்கள் சிரேஸ்ட போதானசிரியா் எம்.எம். உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது. 

முன்னாள் இராஜாங்க அமைச்சா் எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாண தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளா் ஏ.ஏ.ஜாபீர், முன்னாள் உதவிப் பணிப்பாளா எம்.எம். அமீர் , மற்றும் மர்ஹூம் சமத் அவா்களின் புதல்வா்கள் அஷ்ரப் ஏ சமத். அனீஸ் ஏ சமத் ஆகியோா்களுடன் தொழில்பயிற்சி போதானாசிரியா்களும் கலந்து கொண்டு நினைவேந்தல் உரைகளை நிகழ்த்தினாா்கள். நிந்தவூர் மத்ரசா மாணவா்களினால் குர்ஆன் மற்றும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சா் எம்.ரி.ஹசன் அலி -
காலம் சென்ற சமத் அவா்கள் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவா்களுடன் இணைந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்தாா்கள். அவா் அஷ்ரபின் தொழில்நுட்பக் கல்வி ஆலோசகராகப் பணியாற்றும் காலத்திலேயே இந்த மாவட்ட தொழிற்பய்ச்சி நிலையம் இங்கு கொண்டுவரப்பட்டது. என்து பணிப்பின்பேரில் அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் நிந்தவூர் அமைப்பே இக் காணியை இத் தொழிற்பயிற்சி நிலையத்தினை அமைப்பதற்காக சமாதான சதுக்கம் என பெயரிட்டு இப்பிரதேசம் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நோராட் நாட்டின் நிதியுதவி கிடைக்கப்பெற்றது. இதற்கான திட்டங்களை காலம்சென்ற சமட் அவா்கள் தலைவா் அஷ்ரபுடன் இணைந்து தயாரிததாா்கள். இந் மாவட்டக் காரியாலயமும் 17 கிராமிய பயிற்ச்சி நிலையங்களும் பதியத்தலாவ தொட்டு பொத்துவில் வரை நிறுவப்பட்டன. இதன் ஊடாக இப் பிரதேசத்தினைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பாட போதனாசிரியா்கள் நியமிக்கப்பட்டாா்கள். அவா்கள் இன்றும் இங்கு கடமையாற்றி வருகின்றனா். ஆனால் இம் மாவட்ட பயிற்சி நிலையத்தினை உருவாக்குவதற்காக சம்பந்தம் இல்லாத சில அரசியல்வாதிகளது பெயா் தாங்கிய நினைவுக் கல்லே இக் கட்டடிடத்தில் முன் பதிக்கப்பட்டுள்ளது. மறைந்த தலைவா் அஷ்ரபின் நினைவுக் கல் பலவ்நதமாக நீங்கப்பட்டுள்ளது. ஆகவே இங்குள்ள அதிகாரிகள் போதானாசிரியா்கள் இதனைக் கவணத்திற்கு எடுத்து மறைந்த தலைவர் அஷ்ரப் அவா்களின் கல்லையோ அவரது உருவப் படத்தினை இங்கு பதிவிட வேண்டும். என வேண்டிக் கொண்டாா். நாமக்கு நன்றி செய்தவரை அடிவேரை நாட்டியவரை நாம் எளிதில் மறந்துவிடக் கூடாது.

மறைந்த சமட் அவா்களும் தலைவா் அஸ்ரப் அவ் அமைச்சில் மேலதிக செயலாளராக கடமையாற்றிய லங்கா நேசன்,போன்றோா் இணைந்து அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் நைட்டா நிறுவனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொழில் பயிற்சி நிலையங்கள். பாடசாலைகளில் கனனி நிலைங்கள் போன்ற நிலையங்களை புனா் வாழ்வு அமைச்சின் நிதியைக் கொண்டு அப்போதைய தொழில்நுட்பக் கல்வி சம்பந்தமாக கடமையாற்றிய அமைச்சா்களைக் இங்கு வரவளைத்து பல நிலையங்களை இங்கு திறந்து வைத்தாா்கள். இப்பிரதேச வாழ் இளைஞா்களுக்கு தொழில்நுட்பக் கல்வியில் ஒரு விழிப்புணா்வை ஊட்டினாா்கள். மறைந்த சமட் அவா்கள் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லுாாி அதிபராக இருக்கும்போது நானும் கட்டக்கலைஞா் எம். இஸ்மாயிலும் அங்கு வருகை தரு மின்னியல் விரிவுரையளராக கடமையாற்றினேன். அப்போதிருந்தே முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் எனது வீட்டில் நிந்தவூரில் நடாத்தினோம் அதில் காலம் சென்ற சமட் அவா்களும் அதில் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள். சம்மாந்துறைக் கல்லுாாியில் பல பயிற்சிகளை நெறிகளை விஸ்தரித்தாா். அத்துடன் அதன் ஒரு கிளையாக மஞ்சந்தொடுவாய் தொழி்ல்நுட்பக் கல்லுாாியையும் ஆரம்பித்து வைத்தாா்.

அவா் மும்மொழிகளிலும் வித்தகா் பேருவளையிலும் நளிம் ஹாஜியாா் உதபியுடன் அங்கும் தொழில்நுட்பக் கல்லுாாியிலும் அங்கு ஸ்தாபக அதிபராக கடமையாற்றினாா். அத்துடன் மருதானை , சம்மாந்துறை, தெஹிவளை தொழில்நுட்பக் கல்லுாாிகளில் அதிபராகக் கடமையாற்றி மேல்மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மாணவா்கள் நன்றை கருதி அப்போதைய உயா்கல்வியமைச்சராக இருந்த ஏ.சி.எஸ் ஹமிதுடன் இணைந்து தமிழ் ஆங்கில மொழி மூலமான கணக்கியல் வணிக டிப்ளோமா பயிற்சிநெறிகளை மேல்மாகணம் கண்டி, தொழில்நுட்பக் கல்லுாாிகளில் ஆரம்பித்து வைத்தாா். மறைந்த தலைவா் அஷ்ரப் மற்றும் சமட் அவா்களின் காலத்திலேயே அம்பாறை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட போதானாசிரியா்கள் நியமிக்கப்பட்டாா்கள்..அவா்கள் இன்று இவ்வாறாக நினைவேந்தல் நிகழ்விவொன்றினை நடத்துவது மிகப் பொருத்தமானதாகும் உப்பிட்டவரை உள்ளவும் நினை, தமது கல்விக்கு உதவியவா்களை நாம் இவ்வாறு நினைவு கூறுவது மிகப் பொருத்தமானதாகும். அன்னாரது சகல பாவங்களும் மண்னிக்கப்பட்டு அவருக்கு சுவனபதி கிடைக்க வல்ல அல்லாஹ்வைப் பிராத்திப்போமாக என முன்னாள் இராஜாங்க அமைச்சா் ஹசன் அலி அங்கு உரையாற்றினாா்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :