"முழு நாட்டையும் சரியான பாதைக்கு" - ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு அமைப்பாளர் பைஸர் முஸ்தபாவின் அழைப்பின் பேரில் ஸ்ரீல.சு.க. தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமை வகித்து கலந்து கொள்கிறார்



மினுவாங்கொடை நிருபர்-

"சுதந்திரம் பெற்ற மக்களின் நல் வாழ்த்துக்கள்" எனும் தலைப்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட சம்மேளன மாநாடு, இன்று (10) வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, கொழும்பு விகார மகா தேவி பூங்காவிலுள்ள இராணுவத் தூபிக்கு அருகாமையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு, இக்கட்டுரை பிரசுரமாகிறது.

லங்கையின் தலை நகரம் கொழும்பு. கொழும்பின் இதயம், மத்திய கொழும்பு. அந்த மத்திய கொழும்பு மா நகரில் இவ்வாறானதொரு சிறப்புமிக்க மாநாடு ஒன்று இடம்பெறுவதென்றால் அது மிகையாகாது.
இந்த மா நாட்டின் பிரதான கதாபாத்திரமாகத் திகழ்பவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஆவார்.
சிலர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் மூலமாகவும், தலைவிதிகள் மூலமாகவும் மாற்றம் பெற்று வருகின்றனர். அதேபோல் அவர்களுக்கான வசதி வாய்ப்புக்களும், தாமாகத் தேடி வருவதுமுண்டு. அதேவேளை, மற்றும் சிலருக்கு அரசியலிலோ எதிர்பார்க்காத பல்வேறுபட்ட மாற்றங்கள் மற்றும் கெளரவம் புகழென பல வாய்ப்புக்களும் கூட்டாக இணைந்து, உச்சத்தில் தூக்கி வைத்த பல அரசியலாளர்களும் நம் நாட்டில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வாறானதொரு சிறந்த சந்தர்ப்பம் அரசியலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாக பைஸர் முஸ்தபாவுக்கு கிடைத்திருப்பதென்பதே எமது பார்வை.
சுதந்திரக் கட்சிக்கு வரலாற்றிலேயே கொழும்பு மாவட்டத்திலிருந்து மத்திய கொழும்பு அமைப்பாளராக முஸ்லிம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை, அக்கட்சிக்கு புதியதொரு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும். இதன்மூலம் மத்திய கொழும்பு வாழ் மக்கள் மத்தியிலே இன்று ஓர் புத்தொளி புத்துணர்ச்சி விசுவாசம் பிறந்திருக்கிறது.
முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை வைத்தே கொழும்பு மாவட்டத்தை முழுமையாக சுதந்திரக் கட்சியின் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்கு, சுதந்திரக் கட்சி உத்தேசித்திருப்பதானது, கொழும்பு வாழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுதந்திரக் கட்சியின் மாநாட்டிற்குப் பின்னர் அதாவது, எதிர்வரப்போகின்ற எத்தகைய தேர்தல்களாக இருந்தாலும், அத்தேர்தல்களில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவதே, சுதந்திரக் கட்சியின் பாரிய இலக்காகும். அந்த இலக்கை மிக வெற்றிகரமாக அடைந்து கொள்வதற்கே, பைஸர் முஸ்தபாவை மத்திய கொழும்பில் களமிறக்கியிருக்கிறது.
அடுத்தடுத்து வரப்போகின்ற தேர்தல்களில் இரண்டாக, மூன்றாக எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதென்ற சிந்தனை சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம் உயர்வாகக் காணப்படுவதால், அவ்வாறான எதிர்கால அரசியலுக்கு வலுச் சேர்க்கும் வகையில் சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டை இம்முறை நடத்துகிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு முக்கிய பங்கிருக்கிறது. இத்தகைய நிலைக்கு அக்கட்சியின் கடந்த கால பல அரசியல் தலைவர்கள், தங்களின் அளப்பரிய உழைப்பை, அக்கட்சியின் வளர்ச்சிக்காக உரமாக்கியிருக்கின்றார்கள் என்பதை, யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதவையாகும். இன்றும் கூட அக்கட்சியின் வளர்ச்சிக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் (மத்திய கொழும்பு அமைப்பாளர்) பைஸர் முஸ்தபா உள்ளிட்ட கட்சியின் போராளிகள் அரும் பாடுபட்டு வருகின்றார்கள் என்றால் அது பொய்யாகாது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளின் ஒரு தேசிய வெளியீடு, கடந்த 2 ஆம் திகதி புதன்கிழமை மாலை கொழும்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது. "முழு நாட்டையும் சரியான பாதைக்கு" என்ற தலைப்பிலான தேசிய வெளியீட்டினை, அன்றைய தினம் வெளியீட்டு வைத்தனர்.
இதில் 11 கட்சிகள் பங்கு கொண்டிருந்தன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கையின் கம்பியூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, பிவிதுரு ஹெல உருமய, தேசிய காங்கிரஸ், இலங்கை மக்கள் கட்சி, விஜய தரணி தேசிய சபை, ஐக்கிய மக்கள் கட்சி (எக்சத் மஹஜன பக்ஷய), யுதுகம தேசிய அமைப்பு ஆகியனவே கலந்து கொண்டிருந்த கட்சிகளாகும்.
சாதி என்ற வகையில் நாம் நமது சுதந்திரத்துக்குப் பின்பு நடந்து சென்ற பாதைக்குள், மிக நீண்ட காலமாக இடம்பெறும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் நிறையவே எவ்விதத் தீர்வும் இன்றி நடந்தேறி வருவது கசப்பான உண்மையே. இவ்வாறான நிலைமைக்குள் இதுவரைக்கும் நாம் மிகவும் பாரதூரமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம் என்பதை, மிகவும் துள்ளியமாக கண்கூடாகக் கண்டும் அனுபவித்தும் வருகின்றோம்.
இவ்வாறான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்குரிய சரியான தீர்வு என்ன...?, அவற்றுக்கு எதிர்காலத்தில் எவ்வாறு முகங்கொடுப்பது...?, தேர்தல் காலங்களில் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் சமூகத்துக்கான சிறந்த திட்டங்களை தொடர்ந்தும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது...?, உண்மையான கொள்கை அடிப்படையில் மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது...? போன்ற பல தரப்பட்ட விடயங்களுக்கு உரிய தீர்வுகளை வழங்கும் விதத்தில் அமைந்ததாக இந்த தேசிய வெளியீடு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் வெளியீட்டு வைக்கப்பட்டிருப்பது, இன்றைய கால கட்டத்தின் அவசியமும் அவசரமுமான தேவையாகும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளினால் வெளியிடப்பட்டிருக்கும் தேசிய வெளியீட்டில் பதியப்பட்டிருக்கும் காலத்தின் 29 மக்கள் தேவைகள் பின்வருமாறு :
(01) வெளிநாட்டுச் செலாவணி இருக்கையை அதிகரித்துக் கொள்ளல்,
(02) பயிற்சி பெற்ற தொழிலாளர்களையும் உழைப்பாளர்களையும் பயன்படுத்தி வெளிநாட்டு வேலை வாய்ப்புச் சந்தையை அரவணைத்தல்,
(03) தேசிய வைத்திய சிகிச்சையை முன்னிலைப்படுத்தி, சுற்றுலாத்துறையை முழுமையாக மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ளல்,
(04) மின்சார நெருக்கடியை நிவர்த்திப்பதற்காக நீண்டகால மின் உற்பத்தித் திட்டத்தை உள்வாங்கிய தேசிய கொள்கை ஒன்றையும், இலக்கு நோக்கிய செயற்பாட்டுத் திட்டத்தையும் முன் வைத்தல்,
(05) சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் வரி மோசடி உட்பட அனைத்து வரி மோசடிகள் தொடர்பில் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமித்தல்,
(06) இறக்குமதி வரிகளில் வறியவர்களுக்கு நிவாரணம்,
(07) ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும், தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் சமய அடிப்படைவாதத்தை நிராகரித்தல்,
(08) உணவுப் பற்றாக்குறை இல்லாத நாட்டையும், விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களை உள்வாங்கிய சூழலைப் பாதுகாக்கக் கூடிய சமூகத்தைக் கட்டியெழுப்புதல்,
(09) மொத்த வியாபாரிகளின் ஆதிக்கத்தின் ஊடாக பொருட்களைக் கொள்வனவு செய்யும் நிலையங்களுக்கு பதிலாக, விவசாயிகளின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் பொருளாதார மத்திய நிலையங்கள்,
(10) நாடு பூராகவும் உடன் 33,000 சிறிய குளங்கள் மற்றும் அணைகளுக்கு அருகில் சூழல் பாதுகாப்பை மறு சீரமைத்தல்,
(11) விவசாயத் திணைக்களத்திற்குரிய திட்டத்தைப் பயன்படுத்தி, தேசிய விதை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி நிலையங்களுக்கு மீண்டும் உயிரூட்டல்,
(12) விவசாய வங்கிகளை மீளவும் ஆரம்பித்து, விவசாயிகளை கடன் பழுவில் நின்றும் மீட்டெடுத்தல்,
(13) உர மானியத்தை விவசாயிகளுக்கு பணமாகவே வழங்குதல்,
(14) கடற்றொழிலாளர்களின் கனவை நனவாக்குதல்,
(15) அழித்தலுக்கு பதிலாக மாற்றங்கள் மூலம், நோய் பினி பசி பட்டினிகளுக்கு பதிலாக உரிய போஷணை,
(16) தேசிய கைத்தொழில்களுக்கு உயிரூட்டல். எங்கள் மக்களை விழிப்பூட்டல்,
(17) வெளிநாட்டு முதலீட்டாளர்களை எதிர்பார்த்து இருப்பதை விட, தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய கைத்தொழில்களை ஆரம்பித்தல்,
(18) ஒழுக்கக் கேட்டிலிருந்து ஒழுக்கத்தை நிலை நாட்டுவதற்கான மக்களது இதயங்களைப் பாதுகாத்தல்,
(19) மாற்றத்துக்கான மனங்களை உருவாக்குதல்,
(20) "எங்களது பொருள், எங்களது" என்ற மன நிலையைப் பாதுகாத்தல்,
(21) இளைஞர் சமுதாயத்துக்கு முன்னுரிமை - புத்திஜீவிகளுக்கு உரிய இடம்,
(22) வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை ஆக்கிரமித்தல்,
(23) சமூக நியாயத்தை தேசிய அடையாளமாக மாற்றுதல்,
(24) ஊழல் மோசடிகளை ஒழிப்பதன் ஊடாக பாவனையாளர்களைப் பாதுகாத்தல்,
(25) நாட்டுக்காக பாடுபடுபவர்களுக்கு பாதுகாப்பும் நிவாரணமும்,
(26) அதிகாரமிக்கவர்களின் கைகளில் சிக்காமல் எழுந்து நிற்றல்,
(27) பாரிய கனிய வளங்கள் ஊடாக பொருளாதார சக்தியை அதிகரித்தல்,
(28) படையினரை பொருளாதார யுத்தத்திற்கு அழைத்தல்,
(29) பிரதான மற்றும் முக்கியமான கடல் வளங்களின் மூலம் நாட்டின் வளத்தை அதிகரித்தல்.
இவைகள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் "முழு நாட்டையும் சரியான பாதைக்கு" அழைத்துச் செல்லும் வெற்றியின் கம்பத்தில் நிற்கும் சிறப்பான திட்டங்கள். இத்திட்டங்கள் அனைத்தும் நேர்த்தியாகவும் தொடராகவும் இடம்பெற்று, மக்களின் வாழ்வில் மறு மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதே நம் அனைவரினதும் வேண்டுதலாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :