தற்போதைய சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் மிகவும் அவசியமானது. அதனை சிறுபான்மை சமூகத்தினால் ஏற்படுத்த முடியாது. அது பெரும்பான்மை சமூகத்தினராலேயே முயற்சிக்கப்படல் வேண்டும்.
கடமைக்காக ஓரிரு நாட்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினால் மட்டும் பெரும்பான்மை சமூகத்தினரால் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த முடியாது. எகிப்து, துனீசியா போன்ற நாடுகளில் ஏற்பட்டதுபோன்று தொடர் மக்கள் எழுட்சி போராட்டம் நடைபெற்றால் மட்டுமே சாத்தியம் உள்ளது.
இதில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் தன்னை ஹீரோவாக காண்பிப்பதற்கு சிறுபான்மை தலைவர்கள் முற்பட்டால் அது தனது இலக்கை அடைய முடியாது.
அவ்வாறு சிறுபான்மை தலைவர்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் முன்னிலை வகித்தால் அது தென்னிலங்கையில் சஹ்றான், புலி போன்ற முத்திரைகள் குத்தப்பட்டு மக்கள் எழுச்சி போராட்டம் மழுங்கடிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
எனவே ஆட்சி மாற்றத்தை நோக்கிய மக்கள் போராட்டத்தில் சர்ச்சைக்குரிய சிறுபான்மை கட்சி தலைவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக தங்களை முதன்மைப்படுத்திக்கொண்டு விளம்பரப்படுத்துவதை தவிர்த்து பின்னணி வகிப்பதுவே சிறந்தது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment