நிதியமைச்சர் தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என எதிர்க்கட்சி பிரதம கொறடா மற்றும் பதுளை மாவட்ட எம்.பி. ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் உரிய நேரத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். மேலும், 27/2 இன் கீழ் பொருளாதாரம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எத்தனை முறை பேசினார்? பல தடவை அவர் கேள்வி எழுப்பினார். இவை அனைத்திற்கும் ராஜாங்க அமைச்சர் மூலம் நிதி அமைச்சர் பதில் அளித்துள்ளார். எனவே வங்குரோத்து நிலை அடைந்துள்ளதாக கிரியெல்ல கூறினார். உங்கள் முன்னாள் நிதியமைச்சர் தேர்தலின் போது போட்டியிடாமல் ஒதுங்கியதை நினைவூட்டுகிறேன். மற்றொரு நிதி அமைச்சர் தேர்தலில் தோல்வி அடைந்தார். பிரதி நிதியமைச்சர் தேசியப் பட்டியலில் வந்தார். உங்கள் ஐந்து வருடங்கள் இப்படித்தான் இருந்தது.. மேலும் ஜனவரி 1ம் திகதி முதல் பொருளாதாரம் சரிந்து நாடு வங்குரோத்தாகும் என்றும் பேஸ்புக்கில் உங்கள் எம்.பி ஒருவர் கூறினார். எனவே கௌரவ சபாநாயகர் அவர்களே, இன்று விவாதம் ஒன்றை வழங்கியுள்ளோம். கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில், வரலாற்றில் இவ்வளவு யோசனைகள் குறித்து விவாதிக்க அனுமதித்த வேறு அரசாங்கம் இருந்ததில்லை. அவர்கள் சொல்வதை எல்லாம் சொல்ல அனுமதித்துள்ளோம்.
முன்னாள் அமைச்சர் கிரியெல்ல தினமும் காலையில் எழுந்து ஏதோ சொல்கிறார். அவர் பேசுவது எதுவும் தொலைக்காட்சியில் வராது அதுதான் உண்மை.அவர் என் நண்பன். எனவே, எமது நிதியமைச்சர் பொருளாதாரத்தை சரியாகக் கையாள்கிறார். இதை நாங்கள் சவால்களை எதிர்கொள்கிறோம் என்பதை நான் குறிப்பாக சொல்ல விரும்புகிறேன்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :