சம்மாந்துறையைச் சேர்ந்த அல்-ஹாஜ் கலந்தர்லெப்பை இப்றாஹிம் என்பவர் கல்முனை நீதி நிர்வாக எல்லைக்குட்பட்ட சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் கௌரவ ஏ.எம்.முகம்மட் றியாழ் அவர்களது முன்னிலையில் (21) சத்திய பிரமானம் செய்து கொண்டார்.
இப்பிரதேசத்தில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியரான இவர், இப்பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் உதவித் தலைவரகவும் சம்மாந்துறை நூர்ப் பள்ளிவாயலின் நிருவாக சபை உறுப்பினராகவும் பெரிய பள்ளிவாயலில் இயங்கி வரும் ஸகாத் சபையின் செயலாளராகவும் தொய்யன் வட்டை மேல்கண்ட விவசாய அமைப்பின் உறுப்பினராகவும் முபா சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் கணக்காய்வாளராகவும் பதவி வகித்து வருகின்றார்; என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment