கோடிஸ்வரரின் வீட்டை வாடகைக்கு எடுத்து சிறை வைத்த நபர்கள் கைது



J.f.காமிலா பேகம்-
ராணுவபுலனாய்வு பிரிவினர் எனக்கூறி , வெள்ளவத்தை ஹாமர்ஸ் ஒழுங்கையில் வசிக்கும் கோடிஸ்வர வியாபாரியின் வீட்டின் கீழ் தளத்தை, இரு நபர்கள் தினவாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு நாள் வாடகை 10000/- என்ற அடிப்படையிலேயே குறித்த வியாபாரியின் வீடு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.பின்னர் வாடகைக்கு வந்த நபர்கள், குறித்த வியாபாரி உற்பட மூவரை சித்திரவதைசெய்து சிறைப்படுத்தி உள்ளனர்.அத்துடன் வியாபாரியின் சொத்து ,பணம் சம்பந்தமாக விசாரித்து தொந்தரவு செய்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை வெள்ளவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெள்ளவத்தை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட வாழைச்சேனையை சேர்ந்த முஸ்டீன் மற்றும் பைரோஸ் என்பவர்களிடமிருந்து கைவிலங்குகளும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன..சில தினங்களுக்கு முன் "இராணுவபுலனாய்வாளர்கள்" என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு குறித்த வியாபாரியின் வீட்டுக்கு சென்ற இவர்கள், தமக்கு வீட்டின் கீழ்தளத்தை தினசரி வாடகை10000/- க்கு கேட்டுடுள்ளளனர்.இதற்கு ஒத்துக்கொண்ட குறித்தத வியாபாரியும் தமது பிள்ளைளைகளுடன் மேல் மாடியில் குடியிருந்துள்ளார்.
வாடகைக்கு வந்த நபர்கள் இருவரும் வந்த நாள் தொடக்கம் , எந்த வித வாடகை கொடுப்பனவையும் செலுத்தவில்லை.இதனால் கடந்த 27ம் திகதி இரவு வீட்டின் உரிமையாளரான குறித்த வியாபாரி ,வாடகையை கேட்க சென்றுள்ளார்.இச்சந்தர்ப்பத்தில் இந்த "இராணுவ புலனாய்வாளர்கள்" என வாடகைக்கு இருந்த நபர்கள் குறித்த வியாபாரியை தாக்கி கைகளுக்கு விலங்கிட்டுள்ளனர்.அத்துடன் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டி , அங்கிருந்த ஒரு அறையில் குறித்த வியாபாரியை சிறை வைத்துள்ளனர்..
மேலும் வியாபாரியின் வங்கிக்கணக்கு மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விபரங்களை கேட்டு வற்புறுத்தி உள்ளனர். வாடகையை பெற சென் வியாபாரரி நீண்ட நேரம் திரும்பி வராததால் வியாபாரின் உறவினர் ஒருவர் அவரை தேடி தனது நண்பருடன் அவ்வீட்டுக்கு சென்றுள்ளார்.இதன்போது சந்தேக நபர்கள், தேடிச்சென்ற வியாபாரியின் உறவினர் உற்பட நண்பரையும் அடித்து வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டி.. அதே வீட்டில் சிறைப்படுத்தி உள்ளனர். வியாபாரியின் பணவசதி, சொத்துக்கள் சம்பந்தமாக 8 மணித்தியாலங்கள் விசாரித்துள்ளனர்."நாளை இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவருடன் சட்டத்தரணி ஒருவரும் வந்த பின், அவர்களை விடுதலை செய்து பிரச்சனை தீர்க்கப்படும்" என்றும் , இது சம்பந்தமாக பொலிஸுக்கு முறைப்பாடு செய்யப்பட கூடாது என்றும் பயமுறுத்தி உள்ளனர்.அன்றைய இரவே குறித்த வியாபாரியின் உறவினர் மட்டும் விடுதலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் விடுதலை செய்த நபர் அந்த இரவிலேயே வெள்ளவத்தை பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, குறித்த வீட்டுக்கு விரைந்த பொலிசார் சிறைப்படுத்தப்பட்டிருந்த வியாபாரி மற்றும் ஏனையோரை காப்பாறியதுடன் சந்தேக நபர்களான ஆசிரியர் பைரொஸ்,முஸ்டீன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
பொலிசார் குறித்த வீட்டுக்கு சென்றவேளை , வியாபாரிக்கும் அவரது நண்பருக்கும் வாய்களில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு சிறைப்படுத்தி இருந்ததை கண்ணுற்றுள்ளனர்.
இச்சந்தேக நபர்களுக்கு கைவிலங்கு எங்கிருந்து பெறப்பபட்டது மற்றும் இச்சம்பவம் தொதொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :