கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் நீண்ட தொலைநோக்குப் பார்வையில் உள்நாட்டு மருத்துவத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் முதன் முறையாக ஆயுள்வேத முறைப்படி இன்றைய நவீன காலத்திற்கெற்ப தயாரிக்கப்பட்ட மூலிகை வகை உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்ட வல்லாரை கேக், அமுக்ரா பிஸ்கட், சத்துமா பிஸ்கட் போன்ற உணவு வகைகளை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஷித பீ. வணிகசிங்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முதளிதரன் உள்ளிட்ட கிழக்கு மாகாண பிரதம செயலகம், பிரதிப் பிரதம செயலகம், மாகாண அமைச்சுக்கள், மாகாண திணைக்களங்கள் போன்றவற்றிற்கு மாகாண ஆணையாளரினால் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கி வைக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் அறிவுரைக்கமைவாக மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 10 வகையான மூலிகை உணவுப் பொருட்களை இன்றைய நவீன காலத்திற்கமைவாக ஆயுள்வேத முறையின் கீழ் தயாரிக்கப்படுகின்றது. இதில் 3 வகையான உணவுப் பொருட்கள் முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ளமையும், சத்துமா பிஸ்கட் சிறுவர்களுக்கு போசாக்கை ஏற்படுத்தும் வகையில் விஷேடமாக தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment