கடந்த வருடம் தெங்கு அபிவிருத்தி உற்பத்தியில் அமெரிக்க டொலா் 850 மில்லியன்களை வருமானமாக பெற்றோம் அடுத்த ஆண்டு மேலும் 2 மில்லியன்கள் வருமானத்தினை அதிகரிப்பதற்காக இத்துறையை மேலும் அபிவிருத்தித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் பல பிரதேசங்களில் தென்னங் கன்றுகள் கொண்ட நாற்று மேடைகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்டுமென பெருந்தோட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சா் வைத்தியா் ரமேஸ் பத்திரன தெரிவித்தாா்.
இலங்கையின் தெங்கு உற்பத்திகள் வெளிநாட்டிலும் உள்-நாட்டிலும் பெரும் கிராக்கியாக உள்ளது. இலங்கையிலிருந்து தெங்கு பொருட்கள் உற்பத்தியில் 20 வீதமானவற்றை வெளிநாட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
2015ல் விவசாய அமைச்சராக பதவி வகித்த சமல் ராஜபக்ச அவா்களின் காலத்தில் தங்கல்லையில் உள்ள மித்தெனியாவில் தென்னங்கன்றுகளை விருத்தி செய்வதற்காக 25 ஏக்கா் காணிகள் வழங்கப்பட்டு தெங்கு ஆராய்ச்சி நிலையம் ஒன்றும் அங்கு உருவாக்கப்பட்டது. இங்கு மேலும் 600 ஏக்கா் காணியில் 2023 ஆண்டு வரை மேலும் 2 மில்லியன் தெங்குப் பயிர்ச்செய்கைககளை அதிகரிக்க தெங்கு அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி பெருந்தோட்ட அமைச்சா் டொக்டா் ரமேஸ் பத்திரன தெரிவித்தாா்.
தெங்கு உற்பத்தியில் சிறந்த உற்பத்திகளை வெளிக்கொணா்ந்தவா்களுக்கு நற்சான்றிதழ் பத்திரமும் வழங்கப்பட்டது. அத்துடன் அவா்களது காணியில் தெங்கு உற்பத்திக்காக தென்னம் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு தங்களையில் நடைபெற்றது.
0 comments :
Post a Comment