சிங்கள இலக்கியத்தின் யுகப் புருஷர் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் 'கம்பெரலிய' நாவல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அறிமுகம்.



றாஷிதா பாத்திமா-
சிங்கள இலக்கிய யுகத்தின் "புராணக்கதை" என்று அழைக்கப்படும் மார்ட்டின் விக்கிரமசிங்க, இலங்கையின் இலக்கிய அரங்கில் பல வேடங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு ஆக்கபூர்வமான தத்துவஞானி, ஒரு எழுச்சியூட்டும் சிந்தனையாளர் மற்றும் அவரது சகாப்தத்தின் கதையையும் அதன் மக்களையும் வெளிப்படுத்திய ஒரு சிறந்த நாவலாசிரியரும் பத்திரிகை ஆசிரியருமாவார். அவர் பற்றியும், அவர் எழுதிய தொடர் நாவலான 'கம்பெரலிய' எனும் நூல் பற்றியும் ஒரு கண்ணோட்டம் நூலகர் எம்.எம் ரிபாயுதீன் தலைமையில் 15.03.2022 இல் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் ஆக்கங்கள், அவர் பற்றிய பிறரது படைப்புகள், பிறரால் மொழிபெயர்க்கப்பட்ட அவரது நூல்கள் மற்றும் அவர் தொடர்பான இதர ஆக்கங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன.

அத்துடன் மார்ட்டின் விக்கிரமசிங்க பற்றியதான ஓர் விரிவுரை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதான நூலகத்தில் நூலக பயிலுனராக பயிற்சி பெரும் மொழித்துறையில் சிறப்பு மும்மொழிக் கற்கையை கற்றுக்கொண்டிருக்கும் மாணவி எம்.என்.பாத்திமாவினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட சிங்கள மொழி விரிவுரையாளர் ஏ.விக்கிரமரத்ன கலந்து கொண்டார். அவர் தனது உரையில் 'சிங்கள நாவல்கள், அதன் வரலாறுகள், சிங்கள இலக்கியங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் என்பவற்றோடு சிங்கள மொழியினை பலரும் கற்றுத் தேற வேண்டும்' என்பதனையும் வலியுறுத்தினார். மேலும் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் பெறுமதிமிக்க படைப்புக்களை எமது நூலக வாசகர்களும் கற்றறிந்திட வேண்டும் எனும் நோக்கில் அவற்றுக்கென ஒரு தொகுதியினை அமைப்பதற்கு தன்னாலான உதவிகளையும் செய்வதாக தனது உரையில் முன்மொழிந்தார்.

இது கடந்த 08.03.2022 இல் இடம்பெற்ற புத்தக கண்காட்சியின் மூன்றாவது தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :