மலையக பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் இருந்து சகல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக பாசாங்குக்காட்டி வருகின்றனர்.-வேலு குமார்



"மலையக பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் இருந்து சகல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக பாசாங்குக்காட்டி வருகின்றனர்" என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

ராஜபக்சாக்களின் அரசு இன்று மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களின் பங்காளிகள் ஒவ்வொருவராக வெளியிலே குதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளை பார்ப்பதை விட தமது அரசாங்கத்தை காப்பாற்றிக்கொள்ள தட்டு தடுமாறுவதே, அதிகமாக உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் இருந்து சகல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக பாசாங்குக்காட்டி வருகின்றனர். அதற்க்கு அபிவிருத்திக்காக இருக்கின்றோம் என நியாயமும் கூறுகின்றனர்.

இன்று அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை எதிர்ப்பதை போல ஊடகங்களுக்கு கருத்து கூறுவது, பாணியாக மாறியுள்ளது. அதிலே மலையக மக்களின் பிரதிநிதிகள், முதன்மையானவர்களாக உள்ளனர். எமது மக்கள் இன்று ஒரு வேலை உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. வருமான குறைவு, விலைவாசிகள் அதிகரிப்பு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைமைகள் எமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடருமாயின் மீள திருத்த முடியாத ஒரு நிலைமைக்கு எமது சமூகம் சென்றுவிடும். இவற்றை கவனத்தில் எடுத்து, ஜனாதிபதியின், பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியவர்கள், அரசாங்கத்தின் உள்ளே ஒன்றும், வெளியே ஒன்றும் பேசுபவர்களாக உள்ளனர்.

மக்களுக்காக குரல் கொடுக்க இதனை விட வேறு சந்தர்ப்பம் கிடையாது. ஆனால், ஆளும் தரப்பு மெளனமாக உள்ளது. வாய் திறந்து மக்களுக்காக பேசுவதை காணமுடியவில்லை. மாறாக தமது சலுகைகள் மீதே குறிவைத்து செயற்படுகின்றனர். இது சலுகைகளை பெறுவதற்கு மக்களை காட்டிக்கொடுக்கும் நேரமல்ல. அரசியல் லாபம் பெறுவதற்கு நாடகம் ஆடும் நேரமுமல்ல. மக்களை காப்பாற்றுவதற்க்காக அரசாங்கத்திற்குள் வாத விவாதத்தில் ஈடுபட வேண்டிய நேரம். பேரம் பேசலில் ஈடுபடவேண்டிய நேரம். ஆனால் இவை எதனையும் காணமுடியவில்லை. ஒருபக்கம் சலுகைகளுக்காக அரசாங்கம் நல்லது என்கின்றார்கள். மறுபக்கம் மக்களை ஏமாற்ற நாம் தவறானதை எதிர்க்கின்றோம் என்கின்றார்கள். இன்று இந்த நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மீண்டும் கட்சித்தாவி நாம் நல்லவர்கள் என நாடகமாட முடியாது. நாடே சேர்ந்து ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டி அடிக்கும் போது, மலையக மக்கள் ஒன்றாக சேர்ந்து ஆளும் தரப்பில் உள்ளவரகளை விரட்டி அடிப்பது நிச்சயமாகி விட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :