மாமேதை அறிஞர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு தென்கிழக்குப் பல்கலையில் கௌரவம்.(படங்கள்)


சலீம் றமீஸ், எம்.வை. அமீர்-
"விதைத்தவன் உறங்கலாம் ஆனால் விதைகள் ஒரு நாளும் உறங்காது" என்ற கருத்திற்கு இணங்க கம்யூனிசத்தின் தந்தை, மாமேதை கால்மார்க்ஸ் பற்றியும், அவர் எழுதிய பொருளாதாரத்தின் பைபிள் என்று அழைக்கப்படும் மூலதனம் நூல் பற்றியும் ஒரு கண்ணோட்டம் நூலகர் எம்.எம் ரிபாயுதீன் தலைமையில் 10.03.2022 இல் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கார்ல் மாக்ஸின் ஆக்கங்கள், அவர் பற்றிய பிறரது படைப்புகள், மார்க்சியம் பற்றிய நூல்கள் மற்றும் அது தொடர்பான இதர நூல்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டது.

அத்துடன் கால் மார்க்ஸ் பற்றியதான ஓர் விரிவுரை நூலக பயிலுனராக பயிற்சி பெறும் மொழித்துறையில் சிறப்பு மும்மொழி கற்கையை மேற்கொள்ளும் மாணவி எம்.ஏ.Fஎப். ராஸிதாவினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத்  கலந்து கொண்டார். அவர் தனது உரையில் குறிப்பிடும் பொழுது 'இது போன்ற பயிலுனர்கள் மூலம் வாசிப்பையும், நூலகத்தையும், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியையும் மேம்படுத்துவதோடு மறந்துபோன புத்தகங்களை மக்கள் மத்தியில் நினைவூட்ட வேண்டும்" என்று கருத்துரைத்தார்.

தொடர்ந்தும் ஆறு தினங்களுக்கு நடைபெறவுள்ள இப்புத்தக்க் கண்காட்சியை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ்  கடந்த திங்கட்கிழமை பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இப்புத்தக்க் கண்காட்சி இம்மாதம் 14,16,21 மற்றும் 23 ஆம் திகதிகளில் இங்கு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :