மடத்தடியில் மகா கணபதி சண்டி கோமம்



காரைதீவு நிருபர் சகா-
ழ வள நாட்டின் தென் கோடியிலே கோயில் கொண்டு அருள் பாலித்து கொண்டிருக்கும் நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் (6) ஞாயிற்றுக்கிழமை மகா கணபதி மற்றும் சண்டி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு காலை கிரியாதிலகம், கிரியாகால கலாமணி விபுலமணி சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்க களின் தலைமையில் நடைபெற்றது.

உதவியாக சிவஸ்ரீ மயுரவதன குருக்கள் செயற்பட்டார்.

ஆலய தலைவர் கி.ஜெயசிறில் மற்றும் நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கணபதி சண்டி ஹோமம் noகாலை 11 மணி அளவில் அபிஷேகம் சகிதம் ஆரம்பமானது,
ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் யாகபூஜைகள் இடம்பெற்றன.
யாகத்தில் பல திரவியங்கள் ஆகுதியாக்கப்பட்டன. பக்தர்கள் யாகத்தில் தோன்றிய புகையை நுகர்வதில் ஆர்வம் காட்டினார்கள்.
மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கலந்து கொண்டார்கள்.
கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, தடை பிசகுகளை நீக்குமுகமாக இது நடாத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :