மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வறிய மற்றும் தேவையுடையவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நடமாடும் சேவை ஒன்றினை இன்று மேமன் மனிதாபிமான சங்கம்இ அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, மக்கள் நலன்புரி மன்றம்இ ஸாஹிராக் கல்லூரியின் 80வது குழும அங்கத்தவர்கள் ஆகிய நான்கு அமைப்புக்களும் சேர்ந்து மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தன.
மேமன் மனிதாபிமான சங்கத்தின் தலைவர் ஏ.எல்.அன்வர் ஹாஜி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் சுகாதாரப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.ரி.டபிள்யு. விஜிதகுமார், மக்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அஸீஸ் லக்னா, தேசியத் தலைவர் கரீம் ஜெசீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சுமார் 600 பேருக்கு கண்பரிசோதனை செய்து மூக்குக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. குறிப்பாக கொரோனா முடக்கத்தின் பின்னர் பலர் பாரிய பொருளாதார கஸ்டங்களை எதிர் கொண்டுள்ளதால் இந்த இலவச கண்பரிசோதனை முகாமுக்கு பெருமளவானவர்கள் வந்திருந்தபோதிலும் 600 பேருக்கே கண் பரிசோதனையும் மூக்குக் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட்டன. அத்துடன் கண்ணில் வெள்ளைப் படலம் உள்ளவர்களுக்கு புத்தளம் குவைத் வைத்தியசாலையில் இலவசமாக கண் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment