கல்முனை டொக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இலவச மருத்துவ முகாம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை டொக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம் கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது மழ் ஹறுஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது

கல்முனை டொக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தவிசாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் எம்.ஜே.எம். றிசான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக "வளமான தேசத்திற்கு ஆரோக்கியமான சமுகம்" எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இலவச மருத்துவ முகாமின் போது சாய்ந்தமருது மழ் ஹறுஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் உடற் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கல்முனை டொக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எம் ஜே இஸட் எம் ஜமால்டீன், திட்டப் பணிப்பாளர் டொக்டர் எம் ஏ எம் முனீர், பெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தின் , செயலாளர் ஏ புஹாது, டொக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின்
முகாமைத்துவ பணிப்பாளர் எம் எஸ் எம் நஜீம், உதவி முகாமைத்துவ பணிப்பாளர் எம் இஸட் எஸ் றியாஸ், நலன்புரி முகாமையாளர் எஸ் எம் அஜ்வத் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :