சம்மாந்துறை கல்வி வலயத்தில் அதிகூடிய எட்டுவருட வலயக்கல்விப்பணிப்பாளர் சேவையைப் பூர்த்திசெய்து சாதனை படைத்திருக்கும், இலங்கை கல்வி நிருவாகசேவை தரம் 1 அதிகாரியான சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமைப் பாராட்டும் "தடம்பதி விழா" நாளை(4)வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
சம்மாந்துறை வலயம் உருவாக்கப்பட்ட 1998ஆண்டு காலப்பகுதி முதல் இதுவரை ஆறு கல்வி நிருவாகசேவை அதிகாரிகள் வலயக்கல்விப்பணிப்பாளராக இருந்துள்ளனர். இதுவரை எம்.எ.எம்.சாபிதீன் ,ஜ.எம்.இஸதீன் ,எம்.ரி.எ.தௌபீக், எம்.கே.எம்.மன்சூர் ,எஸ்.எஸ்.அப்துல்ஜலீல் ,யு.எல்எம்.ஹாசிம் ஆகிய அறுவர் பணியாற்றியுள்ளனர்.ஏழாவது அதிகாரியாக ஜனாப் நஜீம் 2014.03.03ஆம் திகதி பதவியேற்று இன்றுடன்(03.03.2022 - வியாழக்கிழமை) எட்டுவருடமாகின்றது.
இதுவரை பணியாற்றிய ஆறு அதிகாரிகளுள் எம்.ரீ.எ.தௌபீக் 7வருடங்கள் 10மாதங்கள் 24நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளார்.
ஆக, 24வருட வரலாற்றைக்கொண்ட சம்மாந்துறை வலயத்தில் அதிகூடிய 08வருடங்களைத்தாண்டி பல சாதனைகளைப் படைத்து சேவையாற்றிவருகின்ற ஒரேயொரு கல்வி நிருவாகசேவை அதிகாரி ஜனாப் நஜீம் ஆவார்.
எனவே ,அவரது தடம்பதித்த சேவையைப் பாராட்டி நாளை(4)வெள்ளிக்கிழமை கல்விசார் உத்தியோகத்தர்கள் "தடம்பதி விழாவை "பணிமனையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்கள்.
0 comments :
Post a Comment