பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து இன்று (17.03.2022) மாலை மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.

பிறைந்துரைச்சேனை முஹம்மதியா வீதியில் வசித்து வந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான முஹம்மது முஸ்தபா செய்யது ஹமீட் (வயது – 60) என்பவரே மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு தனது அறையில் உறங்கியவர் மீண்டும் எழும்பாத நிலையில் அவரது பிள்ளைகள் மதியம் எழுப்பியபோது எந்தவித சத்தமும்வராத நிலையில் கதவை உடைத்தபோது அவர் மரணமடைந்த நிலையில் இருந்ததாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்தியற்கு விறைந்த பொலிஸார் அகீல் அவசர சேவை பிரிவின் வாகன உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் இவரது மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :