கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையான டைனமைட் மீன்பிடி முறை காரணமாக கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகள் உள்ளடங்களான கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கான உபகரணம் தற்போது காத்தான்குடி நகர சபையில் மாத்திரமே காணப்படுகின்றது. எனவே இதனை வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச சபைகளுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இல்மனைட் அகழ்விற்கான அனுமதியினை கடல்சார் திணைக்களங்களிடமும் பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
0 comments :
Post a Comment