ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பாண்டுக்கான முதல் செயற்குழு கூட்டம்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பாண்டுக்கான (2022-2023) புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் கொழும்பில் (20) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
போரத்தின் புதிய தலைவி புர்கான் பீ இப்திகாரின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

இத்தெரிவில், உப தலைவர்களாக எம்.ஏ.எம் நிலாம், கலைவாதி கலீல்,
உப செயலாளர்களாக சாதிக் ஷிஹான், ஜாவித் முனவ்வர், உதவி பொருளாளராக ஜே.எம்.நாளிர்,
தேசிய அமைப்பாளராக மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா, ஊடக இணைப்பாளராக எம்.எஸ்.எம். ஸாகிர், சஞ்சிகை ஆசிரியர்களாக ஷாமிலா செரீப், ஷம்ஸ் பாஹிம், பயிற்சிப்பிரிவு பிரதானியாக சமீஹா சபீர், இணையத்தள ஆசிரியராக டீ.ஜீ.எம்.எஸ்.எம் ராபி, ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதோடு, கலாநிதி எம்.சி.ரஸ்மின், எம்.பி.எம்.பைறூஸ், எஸ்.அஸ்கர்கான், எம்.சி.றசூல்டீன், நிலார் எம்.காஸிம் ஆகியோர் ஆலோசகர்களாகவும், யூ.எம்.நஜீம், ரஷீட்.எம்.இம்தியாஸ், ஏ.எம்.வைஸ் ஆகியோர் சட்ட ஆலோசகர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இச் செயற்குழு கூட்டத்தின் போது தலைவிக்கு உள்ள அதிகாரத்தில் தாஹா முஸம்மில், ஷம்ஸ் பாஹிம் ஆகியோர் செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டதோடு, இவ்வருடத்துக்கான பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு, பேராளர் மாநாட்டின் போது அதிகளவான உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் தலைவர் என்.எம் அமீன் செயற்குழுவில் இணைக்கப்பட்டார்

இந்த வருடத்தின் முதல் இரண்டு வேலைத்திட்டங்களாக 56 வருடங்களுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றி வரும் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சுகவீனமுற்றுள்ள மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஏ.எம். ரஷீதுக்கு பண உதவி வழங்குதல், 25 மாவட்டங்களையும் சேர்ந்த புதிய ஐம்பது ஊடகவியலாளர்களுக்கான ஆறு மாதகால தொடர் பயிற்சி வழங்குதல் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் போரத்தின் புதிய செயலாளர் எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத் தெரிவித்தார்.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பேராளர் மாநாட்டின் போது புதிய தலைவியாக சிரேஷ்ட ஒலிபரப்பாளர் புர்கான் பீ இப்திகார், பொதுச் செயலாளராக சர்வதேச விருது வென்ற ஊடகவியலாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத், பொருளாளராக ரொயிட்டர்ஸ் செய்தியாளர் சிஹார் அனீஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சாதிக் ஷிஹான், ஜெம்சித் அசீஸ், எம்.ஏ.எம் நிலாம், கலைவாதி கலீல், ஜாவித் முனவ்வர், எஸ்.எம்.எம். முஸ்தபா, நுஸ்கி முக்தார், எம்.எப். ரிபாஸ், ஷாமிலா செரீப், சமீஹா சபீர், எம்.எஸ்.எம் ஸாகிர், டீ.ஜீ.எம்.எஸ்.எம் ராபி, எம்.எம். ஜெஸ்மின், ஜே.எம். நாளிர், சீ.எம். சுபைர் ஆகிய 18 பேர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :