காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற அதிபர் சீ.திருச்செல்வம் பிரதிஅதிபர் க.புண்ணியநேசன் மற்றும் இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர் சி.சிவாகரன் ஆகியோருக்கான சேவை நனோம்பு விழா நேற்றுமுன்தினம் பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை பிரதி அதிபர் பொன்.பாலேந்திரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெற்றோர்சார்பில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் கலந்துகொண்டு சேவைகூர் உரை நிகழ்த்தினார்.
அதிதிகளாக ஓய்வுபெற்ற அதிபர் சீ.திருச்செல்வம் பிரதிஅதிபர் க.புண்ணியநேசன் மற்றும் இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர் சி.சிவாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் ஆற்றிய சேவைக்காக பாமாலை புனைந்து சேவைநலனோம்புரைகள் நிகழ்த்தப்பட்டு பரிசுகள் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த அதிதிகளால் ஏற்புரைகளும் நிகழ்த்தப்பட்டன.
0 comments :
Post a Comment